"இந்தியாவில் இருக்கும் நம் நாட்டு பிரஜைகளே! நீங்க சொந்த நாட்டுக்கு திரும்பணும்னு நினைச்சா.." ... ‘வேற லெவல்’ கண்டிஷன்களைப் போட்டு அழைக்கும் 'சீனா'!
முகப்பு > செய்திகள் > இந்தியாசீனாவில் தொடங்கிய கொரானா உலகம் முழுவதும் பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் இந்தியாவில் தங்கியுள்ள சீடர்களை அழைத்து வர சீன அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, டெல்லியில் உள்ள சீன தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதும், இந்திய மற்றும் சீன எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டமும் இதற்கு காரணம் என்று கூறப்படும் நிலையில் சீன தூதரக இணையதளத்தில் இதுபற்றி ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியாவில் சிக்கித் தவித்துவரும் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் சிறப்பு விமானம் மூலம் சீனாவுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவதாகவும், சீனாவுக்கு திரும்பி வரும் ஆர்வமுள்ளவர்கள் மே 27-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், யோகா பயிற்சி மற்றும் புத்த மத வழிபாட்டு தலங்களுக்கு வந்த சீன மக்களும் இதில் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் விமானத்தில் பயணிக்க விரும்பும் பயணிகள் தங்களுக்கான கட்டணங்களை தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சீனாவுக்கு சென்ற பின் இவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புள்ளவர்கள் மற்றும் வைரஸ் தொற்று தொடர்பான காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் விமான பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும், வைரஸ் பாதிப்பு தொற்று உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அல்லது 37.3 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு அதிகமாக இருப்பவர்கள் விமானங்களில் ஏறுவதற்கு அனுமதி இல்லை என்றும், பயணங்களுக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் தங்களது உடல் நிலை தொடர்பான தகவல்களை மறைக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மீறி, அவ்வாறு அவர்கள் மறைத்து பரிசோதனையின்போது, ஆண்டிபைரெடிக்ஸ் மற்றும் பிற தடுப்பு மருந்தை பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பொது பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படும் குற்றத்துக்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உடனடியா எல்லாத்தையும் நிறுத்துங்க!'.. உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை!.. உச்சக்கட்ட பரபரப்பில் உலக நாடுகள்!.. என்ன நடந்தது?
- கண்ணீரை துடைக்க நேரமில்லாம வாட்டிய ‘கொடூர’ கொரோனா.. 2 மாசம் கழிச்சு ‘முதல்முறையா’ அமெரிக்காவுக்கு ஆறுதல் தந்த தகவல்..!
- "முடியல!.. சமூகம், பொருளாதாரம்னு எவ்வளவோ இருக்கு!.. கொரோனாவும் கம்மி ஆயிருச்சு!".. அவசர நிலையை முடித்துக் கொண்ட நாடு!
- 'வேலை போச்சு... காசு இல்ல.. வயித்து பொழப்புக்கு என்ன பண்றது?'.. செலவுக்கு பணம் இல்லாததால்... பெற்ற குழந்தையை... பதறவைக்கும் பகீர் சம்பவம்!
- வீட்ட விட்டு 'தொரத்திட்டாங்க'... 'பிச்சை' எடுக்குறேன்னு தெனமும் அழுவேன்... ஒரே நாளில் 'மாறிப்போன' வாழ்க்கை!
- தமிழகத்தில் உச்சம் தொட்ட கொடூர கொரோனா!.. ஒரே நாளில் 805 பேர் பாதிப்பு!.. அதிகம் பாதிக்கப்பட்ட பாலினம் எது தெரியுமா?.. முழு விவரம் உள்ளே
- “அந்த மருந்து என்ன ஒன்னும் பண்ணல.. ஏன்னா எனக்குதான் தொற்று இல்லயே?.. அதனால” - மீண்டும் ‘டிரம்ப்’ எடுத்த ‘அதிரடி’ முடிவு!
- 'சென்னை மக்களே கொஞ்சம் ரிவைண்ட் பண்ணுங்க'... 'இந்த பூனைய ஞாபகம் இருக்கா?... 'சீனா TO சென்னை'... காப்பகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
- 'இருமல் சத்தத்திலேயே தெரிஞ்சிடும்...' 'கொரோனா இருக்கா இல்லையான்னு...' 'அதுவும் வீட்ல இருந்தே தெரிஞ்சுக்கலாம்...' எப்படி தெரியுமா...?
- "சரி நாங்க ஒத்துக்கிறோம்..." ஆனால் 'விசாரணை' நியாயமாக 'நடக்க வேண்டும்'... 'இறங்கி வந்தது சீனா...'