'தடுப்பூசி ரெடியே ஆனாலும்'... 'இவங்களுக்கு மட்டும் கடைசியா தான் கிடைக்கும்?!!'... ' முக்கிய தகவல்களை பகிர்ந்த சீரம் CEO!!!'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குறித்து பல முக்கிய தகவல்களை சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

இறுதி பரிசோதனை முடிவுகள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பொறுத்து 2021 பிப்ரவரியில் சுகாதார பணியாளர்கள், முதியவர்களுக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா நம்பிக்கையுடன் கூறியுள்ளார். அத்துடன்  பொதுமக்களுக்கு ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசி கிடைக்கலாம் எனவும், இரண்டு டோஸ் கொரோனா மருந்து அதிகபட்சமாக ரூ 1000 என்ற விலையில் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "தடுப்பூசி உற்பத்தி தற்போது வேகமாக நடந்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் அது கிடைக்க வாய்ப்பு இல்லை. எல்லாம் திட்டப்படி நடந்தால் அடுத்து வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தடுப்பூசி கிடைத்துவிடும். பின் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மக்களுக்கு தடுப்பூசி கொடுக்க முடியும். வயதானவர்கள், கர்ப்பிணிகள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு தடுப்பூசி வழங்கலாம். ஆனால் அதற்கு எல்லாம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும்.

இங்கிலாந்து அதிகாரிகளும் ஐரோப்பிய மருந்துகள் மதிப்பீட்டு நிறுவனமும் (ஈஎம்இஏ) அவசரகால பயன்பாட்டிற்கு இந்த மருந்துக்கு ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக ஒப்புதல் கேட்கப்படும். முதலில் சுகாதார பணியாளர்கள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி கிடைக்கும். அதன்பின்னர் பாதுகாப்புத் தரவு வெளிவரும் வரை குழந்தைகள் இன்னும் சிறிது காலம் கொரோனா மருந்திற்காக காத்திருக்க வேண்டியிருக்கும். அவர்களுக்கு தடுப்பூசி அறிமுகமாகி குறைந்தது 4 மாதங்கள் கழித்தே கடைசியாக கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்