"இனி ஒரு அடி விழுகட்டும்".. அம்மாவ வேடிக்கையா அடிக்க பாத்த அப்பா.. குழந்தை செஞ்ச விஷயத்தை கொண்டாடும் மக்கள்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அவ்வப்போது இணையத்தில் நாம் வலம் வரும் சமயத்தில் நம்மை சுற்றி நடக்கும் நிறைய விஷயங்களை குறித்து அறிந்து கொள்ள முடியும்.

Advertising
>
Advertising

                             Image Credit : NairaMathur21 Instagram

Also Read | "ஊரே அம்மாவ சூனியக்காரின்னு சொல்லி ஒதுக்கிச்சு".. கேலி செய்த கிராமம்.. உலக கோப்பை ஜெயிச்சு வீராங்கனை கொடுத்த பதிலடி!!

அதே போல, அடிக்கடி நிறைய வீடியோக்கள் அல்லது செய்திகளும் கூட வைரல் ஆகவும் செய்யும். இயல்பாக நடக்கும் விஷயங்களில் இருந்து சற்று மாறுபட்டு புதிய விஷயமாகவோ அல்லது விநோதமாகவோ தோன்றும் சமயத்தில் அவை வைரல் ஆகி நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாக கூட மாறும்.

இந்த நிலையில், அப்படி ஒரு வீடியோ குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகம் வைரலாகி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

இது தொடர்பாக வைரலாகும் வீடியோ ஒன்றில், ஒரு கணவன், மனைவியை விளையாட்டிற்கு அடிக்க முயற்சிகள் மேற்கொள்கிறார். அது விளையாட்டிற்காக இருக்கும் அதே வேளையில், இது உண்மை என கருதும் அவர்களின் குழந்தை தந்தையை கண்டிக்கவும் செய்ய முயற்சி செய்கிறார். அந்த குழந்தையுடன் அங்கே இருக்கும் நாய்க்குட்டி ஒன்றும் அந்த கணவரிடம் குரைக்கவும் செய்கிறது.

Image Credit : NairaMathur21 Instagram

மறுபக்கம், அந்த குழந்தை தனது பாஷையில் தந்தையை கண்டித்தபடி இருக்க, மீண்டும் அவர் மனைவியை அடிப்பது போன்று சைகை காட்டுகிறார். இதனைக் கண்டதும் அந்த குழந்தை மீண்டும் ஆவேசமானதுடன் மட்டுமில்லாமல் ஒரு படி மேலே போய், அங்கே இருக்கும் ரிமோட் ஒன்றை எடுத்து போலீசுக்கு போனில் அழைத்து தந்தை பற்றி புகார் அளிப்பது போன்றும் அந்த குழந்தை செய்கிறது.

Image Credit : NairaMathur21 Instagram

பார்க்க வேடிக்கை கலந்த ஒரு வீடியோவாக இருக்கும் அதே வேளையில், Domestic Violence என்பது இளம் வயதிலேயே அனைவருக்கும் அறியப்படுத்தப்பட வேண்டிய ஒரு விஷயம் என்றும் இன்ஸ்டாகிராமில் Nairamathur21 என்ற அக்கவுண்ட்டில் பகிர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் குறிப்பிட்டது போலவே, தனது தாயை தந்தை அடிக்க முயல்வதை அறிந்து அதனை கண்டித்து குழந்தை செய்யும் விஷயங்கள் பெரிய அளவில் இணையவாசிகள் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

Also Read | "என் மனைவி அப்படி சொன்னத நம்ப முடியல".. குஜராத் பெண் பேசியதை தொடர்ந்து தென்காசி இளைஞர் சொன்னது என்ன.?

CHILD, FATHER, MOTHER, CHILD REACTION, FUNNY VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்