'இஸ்ரோவுக்கு' ஒரு 'சிக்கன் பிரியாணி' பார்சல்...'ககன்யான்' திட்டத்தில் மணக்கும் வாசனை...விண்வெளி வீரர்களுக்கு காத்திருக்கும் 'வேட்டை'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்ல இருக்கம் இந்திய வீரர்களுக்கு சிக்கன்பிரியாணி, சுஜி அல்வா, சிக்கன் கறி, பாதாம் உள்ளிட்ட 30 வகையான இந்திய உணவுளை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இந்திய விமானப்படையில் இருந்து 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி விரைவில் ரஷ்யாவில் தொடங்க உள்ளது.

வீரர்கள் விண்வெளியில் உண்பதற்கான உணவு வகைகளை தயாரிப்பதற்காக, இந்திய  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்களுக்கான உணவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அல்வா, சிக்கன் பிரியாணி உள்பட 30 வகை உணவுகள் இடம் பெற்றுள்ளன. உணவு பட்டியலில் சப்பாத்தி, சுஜி, சிக்கன் கறி, பாதாம், கீரை, பன்னீர் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன.  வழக்கமான இந்திய உணவு வகைகளுடன் பழச்சாறு, எரிசக்தி பானங்கள் போன்ற திரவ உணவுகளும் கெட்டுப் போகாமல் பேக் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளன. விண்வெளி வீரர்கள் எந்த வகையான உணவுகளை விரும்புகிறார்கள் என்பதை இறுதி செய்தபின் அதில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விண்வெளி செல்லும் வீரர்களை கவனத்தில் கொண்டு நாங்கள் ஆராய்ச்சி செய்யவில்லை என்றும், இந்திய உணவு வகைகளை மனதில் வைத்துக் கொண்டே ஆராய்ந்து வருகிறோம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

CHICKEN BIRYANI, ASTRONAUT, ISRO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்