'ஆண் குழந்தை வேண்டுமா'??... பூசாரிகளின் அறிவிப்பை அடுத்து... முண்டியடித்துக் கொள்ளும் பெண்கள்!.. சர்ச்சையை கிளப்பிய பூசாரிகளின் செயல்...!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆண் குழந்தை வேண்டுதலுக்காக வரும் பெண்களை குப்புற படுக்க வைத்து, அவர்கள் மீது பூசாரிகள் நடந்து சென்றால், அந்த பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்குமென்று நம்புகிறது இந்த கிராமம்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் குறையாத நிலையில், சத்தீஸ்கரின் வருடாந்திர மடாய் மேளாவிற்கு முகக்கவசங்கள அணியாமல், சமூக விலகல் இன்றி நூற்றுக்கணக்கான மக்கள் கூடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

ராய்ப்பூருக்கு தெற்கே 66 கி.மீ தொலைவில் உள்ள தம்தாரி மாவட்டத்தில் தீபாவளிக்குப் பிறகு முதல் சனிக்கிழமையன்று மடாய் மேளா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த மக்களின் நம்பிக்கையின்படி, திருமணமான ஒரு பெண் தம்தாரியில் உள்ள அங்கர்மோட்டி தெய்வத்தின் கோயிலுக்கு பிரசாதத்துடன் வந்தால் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பார் என நம்புகிறார்கள்.

பைகா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தலைவிரி கோலத்தில், குப்புற படுத்து பூசாரிகள் தங்கள் மீது நடக்க அனுமதித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று இருந்தபோதிலும், 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முகக்கவசங்கள் இல்லாமல் சடங்கில் பங்கேற்க தம்தாரி மாவட்டத்திற்கு வந்தனர். சமூக விலகல் கடைபிடிக்காமல், பங்கேற்பாளர்கள் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள் நடந்துகொண்டனர்.

முன்னதாக, தீபாவளிக்கு மறுநாள் துர்க் மாவட்டத்தில் நடைமுறையில் இருக்கும், பிரார்த்தனைகளை நிறைவேற்றும் 'சாட்டையடி சடங்கில்' முதலமைச்சர் பூபேஷ் பாகேல் பங்கேற்ற சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்