நீங்க 'அதுக்காக' தான் வெளிய வர்றீங்கன்னா... 'தயவுசெய்து இனிமேல் வராதீங்க...' 'அதுக்கு மாற்று ஏற்பாடு பண்ணியாச்சு...' - சட்டீஸ்கர் அரசின் 'அதிரடி' முடிவு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வீடுகளுக்கே சென்று மதுபானங்களை வழங்கும் திட்டத்தை சட்டீஸ்கர் மாநிலம் அனுமதித்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவ தொடங்கியதால் பல மாநிலங்கள் முழு ஊரடங்கையும், பகுதி ஊரடங்கையும் பின்பற்றி வருகிறது.

இந்நிலையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது, இதில் மதுபான கடைகளும் அடங்கும்.

இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன் மதுபானம் கிடைக்காததால் ஆல்கஹால் கலந்த ஓமியோபதி syrup அருந்திய 9 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் சட்டீஸ்கர் மாநில அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது. அதென்னவென்றால் மதுபானம் தேவைப்படுவோருக்கு வீடுகளுக்கே சென்று மதுபானம் வழங்கும் முறையை அமல்படுத்தியுள்ளது.

இதற்காக காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை குறிப்பிட்ட நேரத்தில் மதுபானங்களை ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

சட்டீஸ்கர் அரசின் முடிவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்