"படிப்ப மட்டும் விட்டுடாத தங்கம்",,.. பெரிய 'டாக்டரா' உன்ன பாக்கணும்,.. மகளுக்காக 'தந்தை' செய்த நெகிழ்ச்சி 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சட்டீஷ்கர் மாநிலம் அம்பிகாபூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் நாகேஷியா. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டில் தனது உறவினர் ஒருவரை சொத்து தகராறு காரணமாக கொலை செய்த வழக்கில் ஜெயிலுக்கு சென்றார்.

ஆனந்திற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சிறை தண்டனை முடிந்து அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனந்தின் மகளான யாமினி தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. செல்போன் வசதி இல்லாததால் யாமினி அருகிலுள்ள வீடுகளில் உதவி கேட்டு பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, ஜெயிலில் அவர் சம்பாதித்த பணத்தைக் கொண்டு தனது மகளுக்கு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இதுகுறித்து ஆனந்த் கூறுகையில், 'எனது மகள் ஆன்லைன் வகுப்புகளில் சரியாக கலந்து கொள்ள முடியாமல் தவிப்பதை நான் சிறையில் இருந்து வந்ததும் தெரிந்து கொண்டேன். சிறையில் இருந்த போது படிப்பின் முக்கியத்துவம் குறித்து நான் உணர்ந்து கொண்டதால் வகுப்பில் பங்கேற்க முடியாமல் தவிக்கும் மகளுக்கு சிறையில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தேன்' என்றார்.

மேலும், 'எனது மகள் மருத்துவர் ஆக வேண்டுமென ஆசைப்படுகிறாள். வருங்காலத்தில் சிறந்த மருத்துவராகி அனைவருக்கும் மருத்துவ சேவை வழங்க வேண்டும். எனது மகளின் கனவை தொடர எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க வேண்டி அதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்வேன்' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்