"படிக்கணும்னு ஆசை சார்.. அப்பா இல்லாததுனால கஷ்டப்படுறோம்".. முதல்வரிடம் கண் கலங்கிய சிறுமி..அடுத்த நிமிஷமே அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசத்தீஸ்கர் மாநிலத்தில் பொருளாதார வசதி இல்லாததால் கல்வி பயில முடியவில்லை எனத் தெரிவித்த சிறுமிக்கு அம்மாநில முதல்வர் உதவியது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
நலத்திட்டங்கள்
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மாவட்டத்தில் நடைபெற்றுவந்த பல்வேறு நலத் திட்டங்களை நேற்று (வியாழக்கிழமை) அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் திறந்துவைத்தார். 44.54 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட திட்டங்களை திறந்துவைத்த முதல்வர் 12 கோடி ரூபாயில் கட்டப்பட இருக்கும் இந்திரா பிரியதர்ஷினி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பொதுமக்கள் முதல்வரிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது சிறுமி ஒருவர் முதல்வரிடம் கோரிக்கை வைக்க, அருகில் இருந்த அனைவரும் அதைக்கேட்டு கலங்கிப்போயினர்.
கோரிக்கை
சத்தீஸ்கர் மாநிலத்தின் சித்ரகூட் பகுதியை சேர்ந்தவர் மாணவி லோகேஸ்வரி. இவருடைய தந்தை 15 வருடங்களுக்கு முன்பாக மரணமடைந்திருக்கிறார். இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மிகுந்த சிரமத்தில் இருப்பதாக லோகேஸ்வரி முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார். மேலும், பொருளாதார வசதி இல்லாததன் காரணமாக, தன்னாலும் தனது தம்பியாலும் கல்வியை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கண்கலங்கியபடி தெரிவித்தார் லோகேஸ்வரி.
முதல்வரிடம், "எனக்கு படிக்க மிகவும் ஆசை. அப்பா இறந்துவிட்டதால் இப்போது கஷ்டப்படுகிறோம். தயவு செய்து உதவுங்கள்" என லோகேஸ்வரி கூற, அங்கிருந்த அனைவரும் கலங்கிப்போயினர்.
முதல்வர் அதிரடி
பொருளாதார வசதி இல்லாததால் கல்வி கற்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் உதவி செய்யும்படியும் மாணவி லோகேஸ்வரி கோரிக்கை வைத்த நிலையில், முதல்வர் பூபேஷ் பாகல் உடனடியாக 3 லட்ச ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறார். லோகேஸ்வரியின் தேவையை அறிந்தவுடன், பஸ்தார் மாவட்ட பொறுப்பாளரை அழைத்த முதல்வர், உடனடியாக சிறுமியின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் அளிக்கும்படி உத்தரவிட்டார். இதனைக்கேட்ட பொதுமக்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.
கல்வி கற்க ஆசை இருந்தும், பொருளாதார வசதி இல்லாததன் காரணமாக படிப்பை தொடர முடியவில்லை என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த மாணவிக்கு உடனடியாக 3 லட்ச ரூபாய் அளிக்க முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 100 காலேஜ் மாணவர்களின் கடன்களை சிங்கிளாக அடைத்த மர்ம நபர்.. இவ்வளவு கோடியை அனுப்பிட்டு பெயரை கூட சொல்லாம போய்ட்டாரே.. வைரல் வீடியோ..!
- எங்களுக்கு லட்டு கொடுக்கல.. ரகளையில் இறங்கிய மாப்பிள்ளை வீட்டார்.. கல்யாண வீட்டில் நடந்த சோகம்.. அதுக்கப்பறம் நடந்துதான் ஹைலைட்டே..!
- மகனுடைய பள்ளிக்கூட பையை பொக்கிஷம் போல சுமந்து செல்லும் தந்தை .. வைரல் வீடியோ..!
- 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - பள்ளிக்கல்வி துறை போட்ட முக்கிய உத்தரவு
- சிவபெருமானின் அவதாரம்... மூன்று கண்களுடன் பிறந்த அதிசய 'கன்றுக்குட்டி' - வழிபடும் மக்கள்
- ARIIA Ranking: நாட்டிலேயே ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்
- VIDEO: அப்பா, ஒருநாள் 'நீ கேட்டத' வாங்கி தருவேன்மா...! 'அன்னைக்கு இந்த ஊரே நம்மள பார்க்கும்...' - கொடுத்த 'வாக்கை' நிறைவேற்றிய தந்தை...!
- VIDEO: ஐயோ, மணமேடையில 'இப்படியா' நடக்கணும்...?! '12 அடி ஊஞ்சலில் ஜாலியாக 'பறந்துக்' கொண்டிருந்தபோது, திடீரென... - திருமண விழாவில் நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்...!
- நீதி வேண்டும், நியாயம் வேண்டும்...! 'பல தடவ கேட்டுப் பார்த்தாச்சு...' 'ரெஸ்பான்ஸ் இல்ல...' - அப்பாவிற்கு எதிராக 'போராட்டத்தை' தொடங்கியுள்ள மகன்...!
- 'கடும் தட்டுப்பாடு'!.. 800 கிலோ மாட்டு சாணம் திருட்டு!.. பின்னணி யார்?.. வழக்குப் பதிவு செய்து காவல்துறை தேடுதல் வேட்டை!