சத்தீஸ்கர் முதல்வருக்கு சவுக்கடி.. கோவில் விழாவில் நடந்த சடங்கு.. "எல்லாத்துக்கும் ஒரே ஒரு காரணம் தான்"
முகப்பு > செய்திகள் > இந்தியாசத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் பூபேஷ் பாகல். மாநிலம் முழுவதும் இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதுடன் மட்டுமில்லாமல் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தனது நாட்டு மக்களுக்காக செய்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக சமீபத்தில் பள்ளி மாணவர்களுடைய கல்வியை ஊக்குவிக்கும் வகையில், 10 மற்றும் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களை ஹெலிகாப்டரில் சவாரி அழைத்துச் சென்று கௌரவப்படுத்தி இருந்தார் பூபேஷ் பாகல். இது குறித்த செய்தி, நாட்டு மக்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டுகளையும் பெற்றிருந்தது.
இப்படி தன்னுடைய மாநிலத்துக்காக ஏராளமான விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறார் பூபேஷ் பாகல். இதனிடையே கோயில் நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் சவுக்கடி வாங்கிக் கொண்டது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆண்டுதோறும் 'கவுரி கவுரா' பூஜை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுவது வழக்கமான ஒன்றாகும். அம்மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பூபேஷ் பாகல் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சவுக்கால் அடிக்கும் ஒரு சடங்கும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பாகலுக்கு சவுக்கடியும் அளிக்கப்பட்டது. சவுக்கை கொண்டு ஒரு நபர் பூபேஷ் பாகல் வலது கையில் ஓங்கி அடிக்க அதனை முதல்வர் பொறுமையாகவும் ஏற்றுக் கொள்கிறார்.
இந்த நிகழ்வின் பின்னணியில் இசைக்கருவிகளும் இசைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது. தான் சவுக்கடி வாங்கும் வீடியோவை சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
மாநிலம் மற்றும் அங்குள்ள மக்கள் அனைவரின் வாழ்வும் செழிக்க வேண்டி ஒவ்வொரு ஆண்டும் இந்த பாரம்பரிய முறை நடைபெற்று வரும் நிலையில், அதில் சத்தீஸ்கர் முதல்வர் கலந்து கொண்டது பற்றி பலரும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்