ஆழ்துளையில் 10 வயது சிறுவன்.. வாளியில் நீரை நிரப்பி அனுப்பும் ஆச்சர்யம்!.. 55 மணி நேர போராட்டம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசதீஷ்கர் மாநிலம், சம்பா மாவட்டத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில், 80 அடி ஆழத்தில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் ராகுலை மீட்கும் போராட்டம் நாட்டையே பரபரப்பாக்கியுள்ளது.
ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது என்பது தொடர்கதையாகி வரும் நிலையில், சிறுவ ராகுல் தன்னை மீட்பதற்கான ஒத்துழைப்பை தருவதுதான் இந்த விவகாரத்தில் கூடுதல் நம்பிக்கை மற்றும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. பொதுமக்களும் சிறுவன் ராகுல் மீண்டு வரவேண்டும் என பிரார்த்தனை செய்துவருகின்றனர்.
சுமார் 3 நாட்களாக, அதாவது தொடர்ச்சியாக 55 மணி நேரத்தை கடந்து, ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் ராகுலை மீட்கும் பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுவினர் முடுக்கிவிட்டுள்ளனர். இதற்கென 20 அடி தொலைவில் கிடைமட்ட சுரங்கம் ஒன்று அமைக்கும் பணிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே சிறுவனுக்கு கயிற்றின் மூலமாக வாழைப்பழம் கொடுக்கப்பட்டதுடன், சிறுவனும் ஆழ்துளைக் கிணற்றில் இருந்தபடி, அங்கு சுரக்கும் தண்ணீரை வாளி மூலம் மேலே அனுப்பும் காட்சிகளுமே வெளியாகி நெகிழ்ச்சி அடையவைத்தன. சிறுவனை மீட்டுவிடும் முனைப்பில் மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Also Read | ஜாலியாக பிறந்தநாள் கொண்டாடிய தமிழக கோவில் யானை 'அகிலா'.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த கியூட் வீடியோ..
மற்ற செய்திகள்