‘சென்னை ஐஐடி மாணவி தற்கொலையில் நீடிக்கும் மர்மம்’.. ‘புதிதாக வெளிவந்துள்ள செல்ஃபோன் பதிவு’..
முகப்பு > செய்திகள் > இந்தியாசென்னை ஐஐடி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஐஐடி நிர்வாகம் உண்மையை மறைக்க முயல்வதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை ஐஐடி பெண்கள் விடுதியில் கடந்த சனிக்கிழமையன்று கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீஃப் எனும் முதலாமாண்டு மாணவி தற்கொலை செய்துகொண்டார். தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாலேயே மனமுடைந்து ஃபாத்திமா இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் கொல்லத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த மாணவியின் பெற்றோர் ஐஐடி நிர்வாகம் உண்மையை மறைக்க முயல்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மாணவியின் பெற்றோர், “எங்கள் மகள் ஃபாத்திமாவின் செல்ஃபோனில் சில பேராசிரியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவளுடைய தற்கொலைக்கு அவர்கள்தான் காரணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஃபாத்திமாவின் செல்ஃபோன் மெசேஜில் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த் பிராமே, ஹேமச்சந்திர காரா ஆகிய பேராசியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
மேலும் பேசிய அவர்கள் இதுகுறித்து தமிழக முதல்வரிடம் பேசுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு சென்றபோதே அங்கிருந்த ஃபாத்திமாவின் செல்ஃபோனில் இந்தத் தகவல்களைப் பார்த்ததாகவும், தற்போது அந்த செல்ஃபோன் மீண்டும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும் கூறப்படுகிறது. ஃபாத்திமாவின் பெற்றோர் கூறியுள்ள தகவல்கள் ஐஐடி வட்டாரத்திலும், கேரளாவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Infinitheism Day: 8ஆம் ஆண்டு கொண்டாட்டம்... சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற சிறப்பு வாக்கத்தான் நிகழ்ச்சி!
- ‘ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரத்தால்’.. ‘அலறித் துடித்த மனைவி’.. ‘சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்’..
- 'இப்படி கூட கல்யாணத்தை நிறுத்தலாமா'?...'மாஸ்டர் பிளான் போட்ட பெண்'...அதிர்ந்த புதுமாப்பிள்ளை!
- 'பூரிக்கட்டையால் ஓங்கி தலையில் அடித்த கணவர்'.. பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
- 'கால் பண்ணுனா சப்ளை பண்ணுவோம்'...'சென்னை'ல ஐடி ஏரியா தான் டார்கெட்'...அதிரவைத்த ஐடி ஊழியர்!
- ‘பெண் வீட்டாருக்கு அள்ளிக் கொடுத்த மாப்பிள்ளை’.. ‘திருமணம் முடிந்த 3வது நாளில்’.. ‘புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’..
- 'கை இல்லனா என்ன தம்பி'...'நெகிழ வைத்த முதலமைச்சர்'...சல்யூட் போடவைத்த முதல்வரின் செல்ஃபி!
- ‘திருமணமான 4 மாதத்தில்’.. ‘பொறாமையால் கணவர் செய்த உறைய வைக்கும் காரியம்’..
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘ஓடும் ரயிலில்’.. ‘சிறுமிகளுடன் வந்த இளைஞருக்கு நடந்த கொடூரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..