ஒரே நாளில் இரண்டாவது கோரம்... ஆந்திராவைத் தொடர்ந்து இந்த மாநிலத்திலும் 'விஷ வாயு கசிவு'!.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திராவில் விஷ வாயு கசிந்து 11 பேர் இன்று பலியாகியுள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்திலும் விஷ வாயு கசிந்துள்ள சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திரா மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள ரசாயண தொழிற்சாலையில், ஸ்டைரீன் எனப்படும் விஷ வாயு கசிந்து 11 உயிர்களை பலியாக்கியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ரய்காரில் உள்ள காகித மில்லில் விஷ வாயு கசிந்து விபத்துக்குள்ளாகியது. இதனால், அந்த மில்லில் ஊழியர்களின் 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து ஆலையின் உரிமையாளர் காவல்துறையிடம் தெரிவிக்கவில்லை எனவும், அதனை காவல்துறையிடம் இருந்து மறைக்க முயன்றுள்ளார் என்றும் ரய்கார் போலீஸ் அதிகாரி சிங் குறிப்பிட்டுள்ளார். அதற்காக ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நாளில் இரு விஷ வாயு கசிவு சம்பவங்கள் நடந்துள்ளதால், இது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்