'அடுத்தவர்கள் மேல் எச்சில் துப்பினால்...' 'கொலை முயற்சி வழக்கு உறுதி...' அவங்க இறந்துட்டா, அதுக்கும் மேல...' இமாச்சல பிரதேச காவல்துறை அதிரடி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் அடுத்தவர்கள் மேல் எச்சில் துப்பினால் கொலை முயற்சி வழக்கு பதிய செய்யப்படும் என இமாச்சலப் பிரதேச காவல்துறை அறிவித்துள்ளது.
தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தி வரும் ஒரு சொல்லாக கொரோனா திகழ்கிறது. பல உலக நாடுகளில், இவ்வைரஸில் இருந்து தப்பிக்க மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி வருகின்றனர்.
உலகளவில் 1,288,319 பேருக்கு கொரோனா தொற்று பரவிய நிலையில் 70,567 மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 272,024 பேர் சிகிச்சை பெற்று நலமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 4565 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 4100 பேர் உடல் நலமடைந்துள்ளனர். மேலும் இறப்பு எண்ணிக்கை நூற்றுக்கும் மேலே சென்றுள்ளது.
தற்போது இமாச்சலப் பிரதேசக் காவல்துறைத் தலைமை இயக்குநர் மார்டி, வேண்டுமென்றே கொரோனாவைப் பரப்பும் முயற்சியைத் தடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பை செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள், யார் மீதேனும் எச்சில் துப்பினால் அந்த செயல் கொலை முயற்சியாகக் கருதப்பட்டு கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்யப்படும், மேலும் துப்பப்பட்டவர் இறந்தால் அது கொலை வழக்காக மாற்றப்படும் என இமாச்சலப் பிரதேசக் காவல்துறைத் தலைமை இயக்குநர் மார்டி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்