"ஓடிப்போய் திருமணம்.. இப்ப 1 வயது குழந்தை".. போக்சோவில் கணவரை கைது செய்யணுமா? நீதிமன்றம் பரபரப்பு பதில்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅகமதாபாத்: காதலித்து திருமணம் செய்யும் வயது வராத இளைஞர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிறுவயதில் காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் விவகாரத்தில், அவர்களின் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் அளித்த அட்வைஸ் மற்றும் பதில் பலரையும் விழிப்படைய செய்துள்ளது.
காதல் திருமணம்
உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் அதுல் மிஸ்ரா. இவர் சிறு வயதில் இருந்தே ஒரு பெணை காதலித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு ஓடி, கோயிலில் திருமணம் கூட செய்து கொண்டனர். ஆனால் மிஸ்ரா தங்கள் மகளை கடத்தி சென்றதாக அவர் மீது அப்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த மிஸ்ராவையும் அப்பெண்ணையும் சில மாதங்களுக்கு பின் கண்டுபிடித்தனர். அப்போது, அந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயாகி இருந்தார். அவர் கையில் கைக்குழந்தை இருந்தது. இதனால், பெற்றோருடன் செல்லும்படி அப்பெண்ணிடம் போலீசார் கூறினர். ஆனால், அப்பெண் மறுத்து விட்டார். வேறு வழியின்றி, குல்தாபாத்தில் உள்ள இளம் பெண்கள் காப்பகத்தில் அவர் சேர்க்கப்பட்டார்.
இளைஞர் கைது
இந்த வழக்கில் போக்சோ பிரிவில் மிஸ்ராவை போலீசார் கைது செய்தனர். தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ராகுல் சதுர்வேதி, "பாலியல் குற்றங்களில் இருந்து வயது வராத பெண்களின் மண ஏற்பு சுதந்திரட்தை காப்பதற்காகவே போக்சோ சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், காதலித்து திருமணம் செய்த இளம் பருவத்தினர் மீது இந்த சட்டத்தில் வழக்கு பதியும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காதல் வயப்படும் பதின் பருவ, இளைஞர்களுக்கு எதிராக குடும்பத்தினர் கொடுக்கும் புகார்கள் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்படுவது தேவையற்றது.
சுமார் 2 ஆண்டுகள் குடும்பம் நடத்திய நிலையில், இவர்களுக்கு, 1 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. அத்துடன் வாலிபருக்கு எதிராக பாலியல் ரீதியான துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் எதையும் அப்பெண் முன்வைக்கவில்லை. இதனால், அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது" என்று கூறி அவருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.
மேலும் நீதிபதி தனது தீர்ப்பில், "பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சிறு வயதில் இருந்தே வாழ்க்கையின் தத்துவங்கள், குடும்ப பாரம்பரியங்கள் போன்ற விஷயங்களை சொல்லி கொடுத்து வளர்ப்பது இல்லை என்பதுதான். இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு இதுதான் காரணம்" என்று குறிப்பிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நீட்' அனிதாவின் அண்ணன் பரபரப்பு கைது.. பெண்ணிடம் தகராறா? பின்னணி 'காரணம்' என்ன?
- விபரீதத்தில் முடிந்த இரண்டாம் கல்யாணம்.. கணவனிடம் போலீசார் விசாரணை!
- கள்ளக்காதல் உறவு வைத்து இருந்ததற்காக பணி நீக்கம் செய்ய முடியாது.. குஜராத் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
- ‘என்ன அம்மா வீடு திறந்து கிடக்கு’.. உள்ளே சென்று பார்த்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த ஷாக்..!
- ‘அவங்க எங்க அம்மா தான்’.. 4 வருச தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த போன் கால்.. ஆனந்த கண்ணீரில் குடும்பம்..!
- 'வடை போடவேண்டிய சட்டியுடன் அங்க ஏ போனீங்க தம்பி .. வாங்க ஜெயிலுக்குப் போகலாம்'.. தூக்கிய போலீஸ்
- தனியாக இருந்த கேரள பெண் மர்ம மரணம்.. சிக்கிய குமரி MBA பட்டதாரி.. அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்..!
- திருமணத்தை மீறிய உறவு.. ஆண் நண்பருடன் வாக்குவாதம்.. பெண் வனக்காவலருக்கு நடந்த விபரீதம்..!
- "நகையை காணோம்".. புகார் கொடுத்தவர் மேல போலீசுக்கு வந்த டவுட்.. விசாரணையில் வெளிவந்த "பலே பிளான்"..!
- "எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்".. ஆண் நண்பருடன் சேர்ந்து மாமியாருக்கு ஸ்கெட்ச்.. CCTV-யில் சிக்குன மருமகள்