ஏர்போர்ட்டில் சந்திரபாபு நாயுடுவை கையெடுத்துக் கும்பிட்ட காவல் அதிகாரி.. என்ன நடந்தது..? ஆந்திராவில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருப்பதி விமான நிலையத்தில் ஆந்திர எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, போராட்டம் ஒன்றில் கலந்து கொள்ள இன்று திருப்பதி விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது போலீசார் அவரை திருப்பதி செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அதிர்ப்தி அடைந்த சந்திரபாபு நாயுடு வரவேற்பு அறைக்குள் திடீரென தர்ணாவில் ஈடுபட ஆரம்பித்தார்.
இதனால் சந்திரபாபு நாயுடுக்கும், காவல் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, ‘நான் 14 ஆண்டுகளாக முதல்வராக இருந்துள்ளேன். இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறேன். எதிர்ப்பு தெரிவிக்க எனக்கு உரிமை இல்லையா?’ என கேள்வி எழுப்பினார்.
அப்போது காவல் அதிகாரி ஒருவர் கையெடுத்துக் கும்பிட்டு சந்திரபாபு நாயுடுவை சமாதானப்படுத்தினார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களுக்கான நடத்தை விதிமுறை மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டி போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததாக போலீசார் விளக்கமளித்துள்ளனர். இந்த நிலையில் ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பயணிகள் மனதில் இடம்பிடித்த ‘மதுரை’ விமான நிலையம்.. இந்திய அளவில் கிடைத்த ‘சிறப்பு’ அங்கீகாரம்..!
- 'கால்பந்த விளையாட யூஸ் பண்ணுவாங்கன்னு பார்த்தா...' 'சீட்ல தனியா கிடந்த கால்பந்து...' 'முன்கூட்டியே கெடச்ச அலெர்ட்...' - உச்சக்கட்ட பரபரப்பு...!
- '3200 வயாகரா மாத்திரைகளுடன் விமானத்தில் பயணம்...' 'என் ஃப்ரண்டுக்கு கொண்டு போறேன் சார்...' - உச்சக்கட்ட அதிர்ச்சியில் கஸ்டம்ஸ் அதிகாரிகள்...!
- 'என் ஆடை, என் உரிமை...' 'இது 1921 இல்ல, 2021...' என்ன நடந்தது...? - கடுப்புல கொந்தளித்த மாடல்...!
- 'ஏர்போர்ட்ல கெடந்த மர்ம பார்சல்...' 'ஸ்கேனிங்ல வெடிகுண்டு இருக்க மாதிரி தான் காட்டுது...' 'எல்லாம் செட் பண்ணி வச்சிட்டு ஒப்பன் பண்ணப்போ...' - எதிர்பார்க்காத டிவிஸ்ட்...!
- அட!.. தமிழ்நாட்டில் வரிசை கட்டும் புதிய விமான நிலையங்கள்!... அதிரடி திட்டம்!.. உங்க ஊரும் லிஸ்ட்ல இருக்கா?
- 'சார், லக்கேஜ் அதிகமாக இருக்கு காசு கட்டுங்க'... '564 ரூபாய்க்கு ஆச பட்டு 30 கிலோ பழத்தை சாப்பிட்ட நண்பர்கள்'... இறுதியில் நடந்த சோகம்!
- எப்படியெல்லாம் யோசிக்குறாங்க...! 'லேப்டாப், சிகரட்லையும் ஒளிச்சு அத வச்சுருக்காங்க...' 'இதெல்லாத்தையும் விட ஒருபடி மேலா போய்...' - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!
- 'ஒரு நிமிஷம் பிபி எகிற வச்சிட்டியே டா'... 'இளைஞரின் சூட்கேஸை திறந்த அதிகாரிகள்'... விமான நிலையத்தை கதிகலங்க வைத்த இளைஞர்!
- பாத்ரூம் போன ‘மனைவி’ ஏன் இன்னும் வெளிய வரல?.. ‘என்னென்னு போய் பாருங்க’.. பெங்களூரு விமான நிலையத்தை அதிரவைத்த ‘சென்னை’ தம்பதி..!