அட என்னங்க சொல்றீங்க...? 'ஆமாங்க, பிரின்ஸ் கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லி என்ன ஏமாத்திட்டாரு...' - கூப்பிட்டு விசாரிச்சப்போ அதிர்ந்து போன நீதிபதி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சண்டிகரை சேர்ந்த யாச்சி என்ற பெண், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த அந்த விசித்திர மனுவில், ‘பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி, எனது மனுதாரரான யாசி என்பவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

ஆனால், அவரை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டார். எனவே, இளவரசர் ஹாரிக்கு எதிராக இங்கிலாந்து போலீஸ் பிரிவு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கேட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்டது. பின்னர், யாச்சியை நேரில் ஆஜராக சொல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அரவிந்த் சிங் சங்வான் மூலமாக விசாரணை நடத்தப்பட்டது.

இதுபற்றி யாச்சி கூறும்போது , ‘இளவரசர் ஹாரியை திருமணம் செய்து கொள்வது குறித்து தாக்கல் செய்யப்பட்ட என்னுடைய மனுவானது, கற்பனை தான், அது உண்மை இல்லை. ஆனால் அந்த மனு மிகவும் மோசமாக தயாரிக்கப்பட்ட மனுவாக உள்ளது’ என்றார். அதற்கு யாச்சியின் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘யாச்சிக்கும், இளவரசர் ஹாரிக்கும் இடையிலான சில மின்னஞ்சல்களில், அவர் மனுதாரரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து உறுதியளித்துள்ளார்’ என்றார், ‘மனுதாரர் இங்கிலாந்துக்கு சென்றுள்ளாரா? இளவரசரை நேரில் பார்த்துள்ளாரா?’ என்று நீதிபதி கேட்டார்.

 அப்போது வழக்கறிஞர் கொடுத்த பதிலில், ‘இணைய ஊடகங்கள் மூலம் இளவரசரிடம் மனுதாரர் பேசியுள்ளார்’ என்றார்.

இறுதிகட்ட விசாரணை நிறைவடைந்த பின்பு நீதிபதி அரவிந்த் சிங் சங்வான் அளித்த உத்தரவில், ‘நீங்கள் ஆதாரமாக காட்டும் எதுவுமே உண்மையானது அல்ல, அவை நகல்களாகவும், பகுதி நீக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் உள்ளது. பேஸ்புக், டிவிட்டர் போன்ற இணைய ஊடக தளங்களில் போலி ஐடிகள் உருவாக்கப்பட்டு போலி புகார்கள் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கனவு உலகில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் மனுதாரர் யாச்சி, எதார்த்த உலகில் வாழ வேண்டும். மேலும், அவரது மனுவும் இப்போது தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்