'காதலியோட முகத்துல சானிடைசர் ஊத்தி...' 'தீ வச்சு கொளுத்திய காதலன்...' - இதுக்கெல்லாமா இப்படி பண்வாங்க...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரூ .2,000 கடன் தர மறுத்த காதலியின் முகத்தில் காதலன் சானிடைசரை ஊற்றி எரித்த சம்பவம் சண்டிகரில் நடந்தேறியுள்ளது.

'காதலியோட முகத்துல சானிடைசர் ஊத்தி...' 'தீ வச்சு கொளுத்திய காதலன்...' - இதுக்கெல்லாமா இப்படி பண்வாங்க...!

சண்டிகர் மாவட்டத்தின் ஷில்லாங்கில் வசிக்கும் 22 வயது இளம்பெண், அப்பகுதியை சேர்ந்த நரேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் நரேஷ் என்பவர் தன் காதலியிடம் ரூ .2,000 கடனாக கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண்மணி தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி கடன் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரேஷ் தன் காதலியின் முகத்தில், சானிடைசரை ஊற்றி லைட்டரைப் பயன்படுத்தி நெருப்பு வைத்துள்ளார்.

சானிடைசரில் இருக்கும் ஆல்கஹால் காரணமாக காதலியின் முகம் பற்றி எரிந்துள்ளது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்துஸ்தான் டைம்ஸின் அறிக்கையின்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் பாதிக்கப்பட்ட இளம்பெண் சண்டிகருக்கு குடிபெயர்ந்ததாகவும், அதன்பின்தான் புரேலில் இருந்த நரேஷுடன் காதல் வயப்பட்டு, ஒன்றாக வாழத் தொடங்கியதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட இளம்பெண், தன் காதலர் நரேஷ் மீது போலீஸ் புகார் அளித்துள்ளார். மேலும் நரேஷ் இதற்கு முன்பே அடிக்கடி பணத்திற்காக தன்னைத் தாக்கியதாக அவர் போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், நரேஷ் மீது ஐபிசி பிரிவு 342 (தவறான சிறைவாசம்), 324 (ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் தானாகவே காயத்தை ஏற்படுத்துகிறது), மற்றும் 506 (குற்றவியல் மிரட்டலுக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து நரேஷ், கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்