'எல்லையில்' அதிகரிக்கும் 'பதற்றம்...' 'சீனாவுடன்' மற்றொரு 'மோதலுக்கு வாய்ப்பு?' 'எச்சரிக்கும் ராணுவ அதிகாரி...'
முகப்பு > செய்திகள் > இந்தியாஎல்லையில் மற்றொரு மோதல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மூத்த ராணுவ அதிகாரி எச்சரித்துள்ளார்.
கடந்த மே மாதம் முதல் இந்தியா, சீனாவுக்கிடையே எல்லைப் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. கடந்த ஜூன் 15ஆம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, இரு ராணுவத்தினரும் மோதிக்கொண்டதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
மக்களிடையே சீனாவுக்கு எதிரான மனநிலை உருவாகியுள்ளதால் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறுபுறம், சீனாவுக்கு வர்த்தக ரீதியாக கட்டுப்பாடுகளை விதிக்க பல்வேறு நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளன.
இதனிடையே இந்திய எல்லைக்குள் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கு சீன எல்லைக்குள் இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை, கல்வான் பள்ளத்தாக்கு இந்திய எல்லைக்குள் இருப்பது வரலாற்று ரீதியாக தெளிவாக இருப்பதாக நேற்று விளக்கமளித்தது. மேலும், எல்லை விவகாரத்தில் சீனா தவறான மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 20 வீரர்களின் வீரமரணத்தை தொடர்ந்து எல்லையில் சூழல் மாறியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். எந்த நேரத்திலும் மற்றொரு மோதல் நடைபெறும் அளவுக்கு பதற்றமான சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய ராணுவத்தின் தலைமை ஜெனரல் வி.பி.மாலிக் கூறுகையில், “பிரச்சினையை உடனடியாக பேசித் தீர்க்காவிட்டால் மற்றொரு மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரு ராணுவத்தினரும் எதிர் எதிரே நின்றுகொண்டிருக்கும்போது கோபமும், பதற்றமும் அதிகமாக இருக்கும். சிறிய பிரச்சினை கூட பெரிய மோதலாக உருவெடுக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எதைப்பற்றியும் கவலையில்லை...' "நீ ரோட்ட போடு மாப்ள..." "இனி வர்ரத பார்துக்கலாம்..." 'உள்கட்டமைப்புகளை' மேம்படுத்தும் 'பணியில்...' '10 ஆயிரம் வீரர்கள்...'
- "10 வருஷ வித்தியாசத்துல இன்னொரு இரட்டைக் குழந்தை!"... "ஆனா அதே கருமுட்டை!".. உறையவைக்கும் நிகழ்வு!
- "சீனாவுக்கு முன்பே இந்த நாடுகளில் கொரோனா தொற்று இருந்திருக்கா?".. ஷாக் தரும் ரிப்போர்ட்!
- இனி 'பொறுத்துக்' கொண்டிருக்க 'முடியாது...' 'தேவைப்பட்டால்' செயலில் 'இறங்குவோம்...' 'சீனாவை' வெளுத்துவாங்கிய 'மைக் பாம்பியோ...'
- உருவபொம்மையுடன் 'திருமணம்'... 90 வயசு அப்பாவோட 'கடைசி' ஆச... எனக்கு வேற வழி தெரியல 'ஆத்தா'!
- வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு நடிகர் கருணாஸ் ரூ.1 லட்சம் நிதி உதவி!.. குழந்தைகளின் கல்விக் கட்டணத்தையும் ஏற்றார்!
- 'வைரஸ் பரவலைத் தொடர்ந்து...' 'சீனாவிலிருந்து' கிளம்பும் 'அடுத்த பூதம்...' 'ஆஸ்திரேலியாவைத்' தொடர்ந்து 'இந்தியாவுக்கு' வரவிருக்கும் 'ஆபத்து...'
- 'சீனர்களின்' ரகசியம் சொல்லும் 'முன்னாள் அதிகாரி...' 'உபசரிக்கும்' போதே முதுகில் 'குத்துபவர்கள்...' அவர்களிடம் 'யுத்த நெறி' பயன்படாது...
- 'என் லவ்வ புரிஞ்சுக்காம அவாய்ட் பண்ணிட்டான்...' '30,000 அடி உயரத்தில விமானம் பறந்துக்கிட்டு இருக்குறப்போ...' காதலி செய்த அதிர்ச்சி காரியம்...!
- 'இந்தியா... தைவான்... ஹாங்காங்!'.. ட்ரெண்டிங்கான 'மில்க் டீ' கூட்டணி!.. ஏக கடுப்பில் சீனா!.. இந்தியாவுக்கு பெருகும் ஆதரவு!