'21 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் 'சிகரெட்' பழக்கம்'!... 'புதிய சட்டத்தால்'... விற்பனையாளர்களுக்கும் 'செக்' வைத்து... மத்திய அரசு அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியா21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இனி சிகரெட் விற்பனை இல்லை என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புகையிலை பொருட்களால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பரவுவதால் அதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கோவில்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவை அமைந்துள்ள இடத்தில் குறிப்பிட்ட தூரம் வரை புகையிலை பொருட்கள் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளை கொண்டுவருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அளித்த ஆய்வறிக்கையின் படி, 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் முதலான புகையிலை பொருட்கள் விற்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது, அந்த வயது வரம்பு 18 ஆக இருக்கும் நிலையில், அதை 21 ஆக அதிகரிக்குமாறு அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்றால் குறிப்பிட்ட அபராதம் விதிக்கும் முறை அமலில் உள்ளது. இந்த அபராத தொகையை இன்னும் அதிகமாக உயர்த்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சிபாரிசுகளை ஏற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், விரைவில் இது சட்டமாக கொண்டு வரப்பட்டு அமலுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மருத்துவமனைக்குள்' நுழைந்த 5 'தீவிரவாதிகள்'... 'அதிரடியாக' நுழைந்து சுட்டுத் தள்ளிய 'போலீசார்'... கடைசியில் தான் தெரிந்தது எல்லாம் 'ரப்பர் குண்டு'...
- "வீட்ல அம்மா சௌக்கியமா?..." என்று கேட்டபடி... 'கம்மாய்க்குள்' பேருந்தை விடும் 'டிரைவர்களுக்காக'... 'கோவையில்' விதிக்கப்பட்ட வித்தியாசமான 'தடை'...
- பல வருஷமா புகைப்பிடிப்பவரா நீங்க.? அப்போ இந்த ‘குட் நியூஸ்’ உங்களுத்தான்..! வெளியான சூப்பர் தகவல்..!
- 7 ஆண்டுகளாக தொடர் ‘வலி’... சென்னை பெண்ணின் வயிற்றிலிருந்த 20 கிலோ ‘புற்றுக்கட்டி!’...
- ‘குறைந்த விலையில்’.... ‘ரேஷன் கடைகளிலும் இனி வாங்கலாம்’... அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
- ‘என்ஜினியரிங் மாணவர்கள்’... ‘இதை படித்திருந்தால் போதும்’... ‘டெட் தேர்வெழுதி’... 'ஸ்கூலில் கணக்கு டீச்சர் ஆகலாம்’!
- ‘ரூ.1000’ லஞ்சப் புகாரில் சிக்கிய செவிலியர் செய்த அதிர்ச்சி காரியம்.. ‘மதுரையில் நடந்த பரிதாபம்’..
- ‘ட்ரெயினிங் இடைவேளையில்’... ‘நாகின் டான்ஸ் ஆடிய'... ‘கவர்மென்ட் டீச்சர்ஸ்’... ‘வைரலான வீடியோவால் நடந்த சோகம்’!
- ‘திருமணத்திற்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ‘நொடிப்பொழுதில் இளம் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்’..
- 'கால் தவறி விழுந்த மூதாட்டி'... 'கண் இமைக்கும் நேரத்தில்'... 'அரசுப் பேருந்தால் நிகழ்ந்த சோகம்'!