இனிமே M.Phil படிப்புகள் கிடையாது!.. என்ஜினியரிங் மாணவர்களுக்கு அடித்த 'சூப்பர் ஜாக்பாட்'!.. புதிய கல்விக் கொள்கையில் அப்படி என்ன இருக்கு?
முகப்பு > செய்திகள் > இந்தியாM.Phil படிப்புகள் நிறுத்துவதோடு பல மாற்றங்களை உள்ளடக்கிய புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது
புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததையடுத்து, கல்விக்கொள்கை குறித்து மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.
* கல்வித்துறையில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
* 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.
* மத்திய மனித வள அமைச்சகம் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்பதே புதிய கல்விக்கொள்கையின் இலக்கு.
* உயர்கல்வி அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்.
* முதல் ஆண்டில் பழைய மற்றும் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்.
* 2 ஆம் ஆண்டில் புதிய கல்விக்கொள்கை முழுமையாக அமலில் இருக்கும்.
* பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள், ஓரிரு வருடங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பை தொடரலாம்.
* 15 ஆண்டுகளில் இணைப்புக்கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும்.
* எம்.பில் (M.Phil) படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு.
* நாடு முழுவதும் ஒரே கல்வித்தரம் கொண்டு வரப்படும்.
* கல்வி அறிவு குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும்.
* தேசிய ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்படும்.
* இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும்.
* மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் வெளியிடப்படும்.
* பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
* கல்வி கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- +1 பொதுத்தேர்வு முடிவுகள் மற்றும் +2 மறுவாய்ப்புத் தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு: பள்ளிக்கல்வித் துறை!
- NIT Trichy-யில் சேருவதற்கு திட்டமிடுகிறீர்களா? JEE Main 2021-க்கு திட்டமிடுங்கள்!
- “பொறியியல் மற்றும் கலைக் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து!!”.. “எந்தெந்த வருட மாணவர்களுக்கு?”.. தமிழக முதல்வர் அறிவிப்பு.. முழு விபரம்!
- "இந்த வருஷம்... +2 மார்க் எல்லாம் தேவையில்ல... ஜஸ்ட் பாஸ் ஆனா போதும்" - ஐஐடி 'நுழைவுத்தேர்வு' குறித்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- 'என்ன வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடா?'.. கொந்தளித்த ஹார்வார்ட் & எம்ஐடி!.. டிரம்ப் அரசு 'பல்டி'!
- “பொண்ணு ரஷ்யால இருந்து வந்து 14 நாள் தனியா இருந்தா”.. மகளைக் காணச் சென்ற பெற்றோர்கள் கண்ட இதயம் நொறுங்கும் காட்சி!
- இந்தியர்கள் மேல் 'இடியாக' இறங்கிய... டிரம்ப்பின் 'அடுத்த' அதிரடி அறிவிப்பு! - கலங்கி நிற்கும் இந்திய மாணவர்கள்!
- செமஸ்டர் தேர்வுகளை நடத்த கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!.. 'இவர்கள்' கட்டாயம் தேர்வு எழுத வேண்டுமாம்!
- 'ஸ்டுடென்ட்ஸ் ரெடியா இருங்க'... 'என்ஜினீயரிங் கல்லூரிகளை எப்போது தொடங்கலாம்'... ஏஐசிடிஇ அறிவிப்பு!
- 'நூற்றுக்கணக்கானோர்' தேர்வு 'எழுதிக்கொண்டிருக்கும்போது...' 'ஒரு மாணவனுக்கு மட்டும் வந்த...' 'டெஸ்ட்' ரிப்போர்ட்டில் அதிர்ச்சி...'