'இந்த' மாநிலத்துல தான் 'உயிரிழப்பு' அதிகம்... ஒழுங்கா 'ஒத்துழைப்பு' குடுக்கல... 'பகீர்' குற்றச்சாட்டு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேற்குவங்க மாநிலத்தில் தான் அதிகம் என மத்திய குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக ஊரடங்கு மே மாதம் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று மூலம் இந்தியா முழுவதும் சுமார் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 11 ஆயிரம் பேர் வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் அதிகம் பாதித்த பகுதிகளில் உள்துறை அமைச்சக குழு சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலம் சென்ற மத்திய குழு அந்த மாநில அரசு சோதனை மேற்கொள்ள முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மத்தியக் குழுவின் அறிக்கையில், 'மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா வைரஸ் மூலம் இறப்பு விகிதம் 12.8 % ஆகும். குறைந்த சோதனை மற்றும் பலவீனமான கண்காணிப்புகள் காரணமாக நாட்டில் அதிக இறப்பு சதவீதம் மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கட்டுப்பாடு மண்டலங்களில் தனி நபர்களை தினசரி கண்காணிப்பதாக மேற்கு வங்கம் கூறிய போதும் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "போராட்டக்களத்தில் ஒரு குட்டி ரிலாக்ஸ்"... "அறுபது மருத்துவர்கள்" ஒன்றிணைந்து... மக்களின் நலனுக்காக வெளியிட்ட 'கூல்' வீடியோ!
- அடுத்தடுத்து விழும் 'இடி'யால்... 'கதிகலங்கி' நிற்கும் 'அமெரிக்கா'... இத்தனை 'கோடி' பேருக்கு வேலையில்லாம போச்சா?
- குணமடைந்த '1 லட்சம்' பேர்... பக்கத்து 'நாடுகளில்' கொரோனா 'சுழன்றடிக்க'... "அதிரடி" நடவடிக்கைகளால் வேகமாக 'மீண்டு' வரும் நாடு!
- "உலகமே ஆடிப்போயி கெடக்கு"... "கொரோனா இன்னும் உக்கிரமா அடிக்கும்"... உலக நாடுகளை எச்சரிக்கும் 'WHO'!
- 'குணமடைந்து' வீடு திரும்பியவர்களுக்கு... 'அறுபது' நாட்கள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி... "சீனால என்ன தான் நடக்குது?"...
- "வைரஸ் பரவ நாங்க ஒண்ணும் காரணமில்ல"... "சும்மா குத்தம் சொல்லிட்டு இருக்காதீங்க"... உலக நாடுகளுக்கு வுஹான் ஆய்வகத்தின் விளக்கம்!
- கொரோனா 'டச்' செய்யாத "15 நாடுகள்"... 'உலகமே' திணறிக் கொண்டிருக்க... 'அந்த' நாடுகளில் நிகழ்ந்தது என்ன?
- "ஸ்கூல் 'ப்ரெண்ட்ஸ்'ங்க தான் புல் சப்போர்ட்" ... கொரோனாவின் பிடியில் "19 நாட்கள்" ... மீண்டு வந்த இளைஞரின் அனுபவம்!
- 'நாட்டு' மக்களிடையே உரையாற்றும் "மோடி" ... அனைவரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ... என்ன அறிவிக்க போகிறார் 'பிரதமர்'?
- ''புதைக்க இடம் இல்லை" ... 'அறை' முழுவதும் "உடல்கள்" ... நெஞ்சை "உறைய" வைக்கும் சம்பவம்!