அடுத்த லிஸ்ட் ரெடி.. இந்தியாவை உளவு பார்க்கும் சீனா.. 54 சீன மொபைல் ஆப்களுக்கு தடை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக மேலும் 54 சீன மொபைல் ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

கடந்த 2020 ஜூன் மாதம் டிக்டாக், யு.சி. பிரவுசர், ஷேர் இட், வீசாட் உள்ளிட்ட 59 பிரபலமான ஆப்கள் தடை செய்யப்பட்டன. அதேபோன்று 2020 நவம்பரில் 43 சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 2020 ஜூன் மாதத்திற்கு பின்னர் மொத்தம் 224 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. இந்நிலையில், நேற்று வெளியா புதிய தகவலின் படி 2000 இன் பிரிவு 69a இன் கீழ் 54 க்கும் மேற்பட்ட சீன ஆப்களை தடை செய்ய இந்திய அரசாங்கம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

54 சீன ஆபு்கள்

தடை செய்யப்பட்ட மொபைல் ஆப்களில் Beauty Camera, Sweet Selfie HD, Beauty Camera – Selfie Camera, Equalizer & Bass Booster, CamCard for SalesForce Ent, Isoland 2: Ashes of Time Lite, Viva Video Editor, Tencent Xriver, Onmyoji Chess, Onmyoji Arena, AppLock, Dual Space Lite ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதாவது டென்சென்ட், அலிபாபா, கேமிங் நிறுவனமான நெட்ஈஸ் போன்ற முக்கிய சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆப்கள் தடை செய்யப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த 54 சீனப் ஆப்களில் பெரும்பாலானவை ஏற்கனவே தடைசெய்யப்பட்ட ஆப்களின் 'மறுபெயரிடப்பட்ட ஆப்கள்' என்று குறிப்பிடப்படுகிறது.  இந்த தடைசெய்யப்பட்ட சீன ஆப்களை இனி இந்தியாவில் பயன்படுத்தமுடியாது.

மத்திய அரசு அதிரடி

இந்த புதிய உத்தரவை வெளியிட்ட மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்த சீன செயலிகள் இந்தியர்களின் முக்கியமான தரவுகளை சீனாவில் உள்ள வெளிநாட்டு சேவையகங்களுக்கு பகிர்வதாக கூறப்படுவதாக தெரிவித்திருந்தது. இதுகுறித்து அதிகாரி ஒருவரு கூறுகையில், 'இந்தியாவில் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த 54 ஆப்கள் நீக்கப்பட்டுவிட்டன' என்று  தெரிவித்தார். இந்த 54 சீன ஆப்களில் பெரும்பாலானவை ஏற்கனவே தடைசெய்யப்பட்ட ஆப்களை போலவே உருவாக்கப்பட்டு பெயர் மாற்றப்பட்ட வேறு பதிப்புகள் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

அலிபாபா, டென்சென்ட்

அந்த மூத்த அதிகாரி கூறுகையில், "அலிபாபாவின் பல ஆப்கள் மற்றும் டென்சென்ட், உரிமையாளர் குறித்த தகவல்களை மறைக்க வேறு பெயரில் பதிவு செய்திருக்கின்றனர். இவை  சீனாவில் இருந்து இல்லாமல், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து ஹோஸ்ட் செய்யப்படுகின்றன. ByteDance-க்கு சொந்தமான TikTok மற்றும் Tencentக்கு சொந்தமான WeChat போன்ற ஆப்கள் பிளேஸ்டோரில் இல்லாமல், APK பைல்ஸ்-ஆக மாற்று வழிகளில் பதிவிறக்கம் செய்யக் கிடைத்து வந்தன. தற்போது அரசாங்கம் அதையும் கவனத்தில் எடுத்துள்ளது" என்று கூறியுள்ளார்.

54 CHINESE APP, BAN FOR INDIA, CENTRAL GOVT, ALIBABA, TENECENT, SINGAPORE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்