குழந்தைகளுக்கு பரவும் 'தக்காளி காய்ச்சல்'.. மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய அவசர அட்வைஸ்.. முழுவிபரம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் (Tomato Flu) பரவி வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "ஏதோ தப்பா நடக்குது".. உயிரிழந்த நடிகை இறுதி நிமிடத்தில் போனில் சொன்ன விஷயம்.. சகோதரி வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்..!

தக்காளி காய்ச்சல்

தக்காளி காய்ச்சல் ஒரு வைரஸ் நோய் ஆகும். கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் முதன்முதலில் தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டது, ஜூலை 26 ஆம் தேதி வரை, 5 வயதுக்குட்பட்ட 82 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள உள்ளூர் அரசு மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன. இதனால் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒடிசாவில் 26 குழந்தைகளுக்கு (1-9 வயது) இந்த நோய் இருப்பதாக அறிவித்திருக்கிறது.

அறிகுறிகள்

இந்த நோய் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தடிப்புகள் மற்றும் மூட்டுகளில் வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். தோலில் ஏற்படும் தடிப்புகள் தோல் எரிச்சலையும் ஏற்படுத்தும். மற்ற வைரஸ் தொற்றுகளைப் போலவே, சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், நீரிழப்பு, மூட்டுகளில் வீக்கம், உடல்வலி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் தொடங்கி ஓரிரு நாட்களுக்குப் பிறகு, சிறிய சிவப்பு புள்ளிகள் தோன்றும், அவை கொப்புளமாகவும் பின்னர் புண்களாகவும் மாறும். புண்கள் பொதுவாக நாக்கு, ஈறுகள், கன்னங்களின் உட்புறம், உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள். தோலில் ஏற்படும் கட்டிகள் சிவந்து தக்காளி போலவே மாறுவதால் இதனை தக்காளி காய்ச்சல் என குறிப்பிடுகின்றனர்.

முன்னெச்சரிக்கை

இதற்கான பிரத்யேக தடுப்பூசிகள் இல்லை எனக் கூறியுள்ள சுகாதாரத்துறை நிபுணர்கள் இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்திருக்கின்றனர். மேலும், சுற்றுப்புற சூழலை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பொருட்களை பிற குழந்தைகள் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோய்க்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக 5 - 7 நாட்களுக்கு குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மாநில அரசுகள் தக்காளி காய்ச்சல் பரவலை கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Also Read | "2 நாள்ல 10 மடங்கு பெருசாகிடுச்சு.. அது ஒன்னு மட்டும் நடக்காம இருக்கணும்".. சூரியனில் உருவான Sun spot.. ஆராய்ச்சியாளர்கள் சொல்லிய பகீர் தகவல்..!

CENTRAL GOVERNMENT ISSUES ADVISORY, TOMATO FLU, தக்காளி காய்ச்சல்

மற்ற செய்திகள்