Viral Video: 'சானிடைசர் தெளிச்சப்போ...' மளமளவென பற்றி எரிந்த பைக்... 'வைரலாகும் வீடியோ...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்ற ஊழியரின் பைக் மீது சானிடைசர் அடித்தவுடன், பைக் பற்றி எரிந்த சிசிடிவி வீடியோ வைரலாகி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

Viral Video: 'சானிடைசர் தெளிச்சப்போ...' மளமளவென பற்றி எரிந்த பைக்... 'வைரலாகும் வீடியோ...'
Advertising
Advertising

உலகம் முழுவதும் பரவி வந்துகொண்டிருக்கும் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், நம்மை தற்காத்து கொள்வது மட்டுமே ஒரே வழி என விஞ்ஞானிளும் மருத்துவர்களும் கூறி வருகின்றனர். முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு அடிக்கடி கைகழுவுதல் இவையே கொரோனோவிடமிருந்து நம்மை தற்காத்து கொள்ளும் ஆயுதங்கள்.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்புக்காக தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றிலிருந்த சில தளர்வுகளுடன் அனைத்து வித தொழிற்சாலைகள் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள புகழ்பெற்ற அரவிந்த் மில் என்ற ஜவுளி உற்பத்தி தொழிற்சாலை திறக்கப்பட்ட நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தொழிற்சாலைக்கு வரும் வாகனங்களுக்கு செக்யூரிட்டிகள் மூலம் சானிடைசர் அடிக்கப்பட்டது.

சூடாக இருந்த இருசக்கர வாகனத்தின் மீது சனிடைசர் தெளித்ததும், தீடீரென பைக் தீப்பிடித்து எரிகிறது. உடனே சுதாரித்துக்கொண்ட  இருசக்கர வாகனத்தில் இருப்பவர் பைக்கில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். அருகில் இருந்த காவலாளிகள் தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைத்தனர்.

சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வது இயல்பானது தான் ஆனால் சானிடைசரில் ஆல்கஹால் அளவு 60 சதவீதம் இருப்பதால் அதனை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கிச்சனில் சானிடைசர் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்