+2 பொதுத் தேர்வு ரத்து செஞ்சுட்டா போதுமா?.. மாணவர்கள் எதிர்காலம் என்ன?.. உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!.. மத்திய அரசின் திட்டம் 'இது' தான்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட போதிலும் மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்கப்படும் என ஏன் அறிவிக்கவில்லை என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா 2வது அலை காரணமாக சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வுகள் குறித்து முடிவெடுக்காமல் இருந்த நிலையில், சமீபத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்த பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அப்போது சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பொதுத்தேர்வுகள் குறித்து மத்திய அரசு என்ன முடிவெடுத்திருக்கிறது என்றும், இதுகுறித்து கொள்கைரீதியிலான முடிவை 3 நாட்களில் எடுக்கவும், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதற்கு மத்திய அரசு, சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக 2 நாளில் முடிவு எடுக்கப்படும் என்று தகவல் தெரிவித்தது. எனவே, பொதுத்தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடப்பு ஆண்டிற்கான சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், மாணவர்களின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்றும் இதில் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் கூறி, மத்திய அரசு சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வுகளை இந்த ஆண்டு ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்கப்படும் என்றும், மதிப்பெண் வழங்குவது குறித்து 2 வாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சிபிஎஸ்இ-க்கு ரூட் க்ளியர்!.. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு உண்டா? இல்லையா?.. முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள்!
- 'அமைச்சர்கள் மீட்டிங்யில் பிரதமர் சொன்ன முக்கிய விஷயம்'... '12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு ரத்து'... மத்திய அரசு அறிவிப்பு!
- பிளஸ் டூ தேர்வில் மாற்றம்...! 'ஒரு தேர்வை இன்னொரு தேதிக்கு தள்ளி வைப்பு...' - தேர்வுத்துறை தகவல்...!
- 'மொட்ட மாடியில ஒரே சத்தமா இருக்கேன்னு திரும்பி பார்த்தா...' 'தமிழக முதல்வருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அரியர் மாணவர்கள்...' - முதல்வரை வரவேற்ற மாணவர்கள்...!
- VIDEO: ‘காலேஜுக்குள் லவ் புரோபோஸ்’!.. வைரலான காதல் ஜோடி.. அதிரடி ஆக்ஷன் எடுத்த யுனிவெர்சிட்டி நிர்வாகம்..!
- பிளஸ்-2 ‘பொதுத்தேர்வு’ அட்டவணை வெளியீடு.. தேர்வு ஆரம்பிக்கும் நேரம் என்ன? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!
- 'பிள்ளைங்க நல்லா படிச்சா போதும்'... 'மாணவர்களுக்கான அசத்தலான திட்டம்'... தொடங்கிவைத்த முதல்வர்!
- “படிப்பு முடிந்தும் பட்டய சான்றிதழை வாங்க பணம் இல்ல!”.. ‘நூறுநாள் வேலைக்கு போகும் மாணவி!’.. ‘கேள்விப்பட்டதும் நடிகை செய்த காரியம்!’
- “பாய் ஃப்ரண்ட் இல்லாத ‘சிங்கிள்’ மாணவிகளுக்கு காலேஜ்க்குள்ள வர அனுமதி இல்ல!” - ‘பேராசிரியர்’ கையெழுத்துடன் ‘கல்லூரியை’ அதிரவைத்த ‘வைரல்’ நோட்டீஸ்!
- ‘நாங்க வாழ்க்கையில முன்னேர அவங்கதான் காரணம்’.. தேடிக் கண்டுபிடித்து கௌரவம்.. சென்னை அருகே நடந்த நெகிழ்ச்சி..!