"தேசிய நெடுஞ்சாலையில்".. "தெருநாய் போல்".. பகல் தூக்கம் போட்ட சிறுத்தை.. 'வியர்த்து' விறுவிறுத்து 'வண்டியை' நிறுத்திய வாகன ஓட்டிகள்'!.. பரபரப்பு வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை ஒன்று படுத்து உறங்கியிருந்ததை கண்ட மக்கள் அதிர்ந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் வனவிலங்குகள் சாலைகளில் வெகு இயல்பாக நடமாடி வரும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அப்படித்தான் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில், சிறுத்தை ஒன்று படுத்து உறங்கிக் கொண்டிருந்த நிகழ்வு பலரையும் அதிரவைத்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அவ்வழியே சென்ற ஒருவரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டதை அடுத்து இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

தெலுங்கானா மாநிலம் சைபராபாத்தின் மைலர் தேவ்பள்ளி பகுதிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாததால், சிறுத்தை ஒன்று தெருநாயைப் போல, சாதுவாக படுத்து உறங்கிக் கொண்டிருந்ததால் பலரும் ‘உறங்குவது’ சிறுத்தை என்று அறிந்த கணம் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காலை 8 மணி அளவில் சிறுத்தையின் இருப்பை யாரோ தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் பின்னர் வனத்துறையினருக்கும்

நேரு விலங்கியல் பூங்காவினருக்கும் தகவல் கொடுத்ததாகவும், சிறுத்தை காயமுற்று இருந்ததாகவும், ஆனால் அதிகாரிகள் விரைந்து செல்வதற்குள் சிறுத்தை தப்பியோடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்