பார்வையில்லாத புறாவை வேட்டையாட நெருங்கிய பூனை..பாவமா நின்ன புறா.. கடைசில நடந்ததுதான் செம்ம.. நெகிழ வைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

புறாவை வேட்டையாட சென்ற பூனை ஒன்று, இறுதியில் முத்தமிட்டு விலகிய வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

இணைய வசதி அதிகரித்துள்ள இந்த காலத்தில், எளிதில் நம்மால் உலகின் அடுத்த பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளைகூட சில நிமிடங்களில் அறிந்துகொள்ள முடிகிறது. அதேபோல, சுவாரஸ்ய சம்பவங்களை வீடியோவாக எடுத்து, சமூக வலை தளங்களில் பதிவிடுவோரின் எண்ணிக்கையும் இந்த காலத்தில் அதிகரித்திருக்கின்றன. சொல்லப்போனால், இதுபோன்ற வீடியோக்களை பார்க்க பெரும்பான்மையான மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அதனாலேயே இதுபோன்ற சுவாரஸ்ய வீடியோக்கள் மிகக்குறைவான காலத்திலேயே வைரலாகிவிடுகின்றன. அந்த வகையில், தற்போது புறாவை பூனை ஒன்று முத்தமிடும் வீடியோ ஒன்று நெட்டிசன்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

பதுங்கிய பூனை

இந்த வீடியோவில் வீடு ஒன்றின் மேல் தளத்தில் வெண்மை நிற புறா நிற்கிறது. மர சட்டங்களால் அமைக்கப்பட்ட மேற்கூரைப் போன்ற அமைப்பில் ஒரு மூலையில் புறா அமைதியாக நிற்க, மற்றொரு பகுதியில் பூனை ஒன்று மெல்ல அடியெடுத்து வைத்து புறாவை நெருங்குகிறது. ஆனாலும், புறா அமைதியாகவே நிற்கிறது.

வேட்டையாடுவதற்காக சென்ற பூனை, புறா நகராமல் இருப்பதை பார்த்து குழப்பமடைகிறது. அதன் பின்னர் தனது மனதை மாற்றிக்கொண்டு புறாவை முத்தமிட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்கிறது. இது காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது.

வைரல் வீடியோ

இந்த வீடியோவை சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அவனீஷ் சரண் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவனீஷ் அந்த பதிவில்,"பூனை அந்த புறாவை இரையாக்க நினைக்கிறது. ஆனால், புறாவிற்கு கண்பார்வை கிடையாது. இதனை உணர்ந்த பூனை, இறுதியில் தனது மனதை மாற்றிக்கொள்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை 29 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

இந்த பதிவில்,"பூனைகள் தங்களது இரையை விரட்டி பிடித்தே வேட்டையாடும். ஆனால், புறா அமைதியாக நிற்பதால் விட்டுவிட்டது" என்றும், "இரக்க குணத்தை நாம் இதுபோன்ற விலங்குகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்" எனவும் பல்வேறு விதமாக கமெண்ட் போட்டுவருகின்றனர் நெட்டிசன்கள்.

 

CAT, PIDEON, VIDEO, பூனை, புறா, வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்