வீடியோ: இதுதான் உண்மையான 'கும்மாங்குத்து திருவிழா'... '2000 பேர்'... '20 நிமிடம்'.... '100' பேர் 'மண்டை' உடைந்தது....
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலங்கானா மாநிலத்தில் 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற திருவிழாவில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் சுமார் 100 பேர் மண்டை உடைந்தது.
ஹோலி பண்டியையொட்டி ஆண்டுதோறும் நிஜாமாபாத் மாவட்டம் ஹன்சா கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இந்தத் திருவிழா நடைபெறுவது வழக்கம். பல்வேறு ஜாதியினரும் பங்கேற்கும் இத்திருவிழாவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்த பின்னர் இரு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் கும்மாங்குத்து குத்திக் கொள்ளும் இந்த நிகழ்ச்சி அரங்கேறுகிறது.
இந்த விழாவுக்கு காவல்துறை அனுமதி மறுத்த போதும் அதனையும் மீறி இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுதான் வருகிறது. நடுவில் கயிறு ஒன்றை கட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருபிரிவாக பிரிகின்றனர். அதன் பிறகு ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொள்கின்றனர். 20 நிமிடங்களே அரங்கேறிய இந்த சண்டையில் சுமார் 100 பேருக்கு மண்டை உடைந்தது.
பலருக்கு ரத்த காயம் ஏற்பட்ட போதும் அதைக் கண்டுகொள்ளாத அவர்கள் ஆஞ்சநேயர் கோயில் அக்னிகுண்டத்து சாம்பலை அள்ளி தங்கள் காயத்தின் மீது பூசிக் கொண்டனர். தங்கள் கிராமத்திற்கு எந்த கெடுதலும் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த திருவிழாவை கொண்டாடுவதாக விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பாட்டியுடன் வாசலில் விளையாடிய குழந்தை’... ‘சென்செஸ் எடுக்க வந்ததாகக் கூறி’... ‘மர்மநபர்களால் நடந்த பரிதாபம்’!
- ‘கடைசியா அப்பாவோட முகத்தை பார்க்கணும்’... ‘உருக்கமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு’... ‘உயிரிழந்த தந்தையை பார்க்கச் சென்ற மகள்’... 'களேபரத்தால் நிறைவேறாத ஆசை'!
- VIDEO: ‘கட்டையால் தலையில் ஓங்கி விழுந்த அடி’!.. ரோட்டில் சுருண்டு விழுந்த நபர்.. பதபதக்கவைத்த வீடியோ..!
- 'கர்ப்பிணி மகளின் கண்முன்னே'... 'காதல் கணவர் கொலை'... 'ஜாமீனில் வெளியே வந்த'.. 'குற்றஞ்சாட்டப்பட்ட தந்தை'... 'கடிதம் எழுதி வைத்துவிட்டு எடுத்த அதிர்ச்சி முடிவு'!
- ‘வெளிய கூட்டிட்டு போய்ட்டு வரேன்’... நம்பி ‘4 குழந்தைகளையும்’ அனுப்பிய ‘தாய்’... ‘தந்தை’ கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் ‘உறைந்துபோன’ போலீசார்...
- நின்றுகொண்டிருந்த பேருந்தில்... ‘ரூ 3 கோடி’ நகைகள் கொள்ளை... ‘திருடர்கள்’ வழியிலேயே சென்று... ‘ஸ்கெட்ச்’ போட்டு ‘மீட்ட’ போலீசார்...
- 'கல்யாண மேடையில் இருந்த மணப்பெண்... கல்யாணத்துக்கு வந்த முன்னாள் காதலன்!'... மணப்பெண் எடுத்த அதிரடி முடிவால்... கதிகலங்கிப்போன திருமண மண்டபம்!!
- 'தமிழிசை சவுந்தரராஜனின்' நெருங்கிய உறவினர் தற்கொலை... 'கோவையில்' நிகழ்ந்த அதிர்ச்சி 'சம்பவம்'... 'போலீசார் விசாரணை'...
- 'பயமே எங்கள பாத்தா தெறிச்சு ஓடும்'...'மேடையில் தெறிக்க விட்ட அமைச்சர்கள்'... பரபரப்பு சம்பவம்!
- ‘சிறுவன்’ கண்முன்னே... ‘மொத்த’ குடும்பத்திற்கும் நேர்ந்த பயங்கரம்... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘துயரம்’...