அடிச்சு துவைச்ச மழை.. சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்.. ரோட்ல நின்ன காருக்கு வந்த நிலைமையை பாருங்க.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ராஜஸ்தான் மாநிலத்தில் பெய்த கனமழையால் சாலையில் நின்றிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | செங்குத்தான பாறைல வெறுங்காலோடு அசால்ட்டாக ஏறிய வயசான துறவி .. ஆடிப்போன மலையேறும் வீரர்கள்..

தென்மேற்கு பருவமழை

ஜூன் முதல் செப்டம்பர் ஆகிய மாதங்களில் வட மற்றும் மத்திய இந்தியாவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். இதனை ஈடுகட்ட இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து காற்றுவீசும். அப்போது, நீர்த்துளிகளை கொண்டுள்ள காற்று மலைகளின் மீது மோதி குளிர்வடைந்து மழையாகப் பெய்யும். கேரளா, மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதிகள், கொங்கன் கடற்கரை ஆகிய இடங்களில் இந்த பருவகாலத்தில் அதிக மழைப்பொழிவு பதிவாகிறது.

இந்நிலையில், இந்தியாவின் மேற்கு மாநிலமான ராஜஸ்தானில் கடந்த சில தினங்களாக மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல ஓடுகிறது. இதுவரையில் கனமழை காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்திருக்கிறார்.

வைரல் வீடியோ

இதனிடையே ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த திங்கட்கிழமை பெய்த மழையில் அந்த பகுதியே ஸ்தம்பித்திருக்கிறது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படுவது அதிகரித்திருக்கிறது. அந்தவகையில் திங்கட்கிழமை அன்று இரண்டு கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

கனமழை காரணமாக நேற்று ஜோத்பூர் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனிடையே அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருக்கிறது.

எச்சரிக்கை

கடந்த திங்கட்கிழமை இந்திய வானிலைமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ராஜஸ்தானின் ஜோத்பூர், கோட்டா, அஜ்மீர் மற்றும் உதய்பூர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பாரத்பூர், ஜெய்ப்பூர் மற்றும் பிகானர் பிரிவுகளிலும் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Also Read | இந்திய IT நிறுவனங்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் CEO.. திகைக்க வைக்கும் தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார்..!

HEAVYRAIN, RAJASTAN, CARS WASHED AWAY IN FLOODED, JODHPUR ROAD, HEAVY RAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்