விமானத்துக்கு கீழே வேகமாக சென்ற கார்.. கொஞ்ச நேரத்துல பதறிப்போன அதிகாரிகள்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லி விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த விமானத்தின் கீழ் கார் ஒன்று வேகமாக சென்றதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Advertising
>
Advertising

Also Read | மனைவி மறைந்த அடுத்த கணமே 91 வயது முதியவருக்கு ஏற்பட்ட சோகம்.. மரணத்திலும் மனைவியை கைவிடாத பாசமிகு கணவர்.. !

டெல்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இன்று காலை வழக்கம்போல பரபரப்புடன் காணப்பட்டது. இந்த விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினலில் இண்டிகோ விமானம் நின்றுகொண்டிருந்தது. அப்போது, அதன் முன்பக்கத்துக்கு கீழே கார் ஒன்று வேகமாக சென்றிருக்கிறது. இதனால் அங்கிருந்த விமான நிலைய அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

குறுக்கே சென்ற கார்

இந்நிலையில் கார் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த தகவல் உயர்மட்ட அதிகாரிகளுக்கு சொல்லப்படவே, அனைவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றிருக்கிறார்கள். நல்ல வேலையாக விமானத்துக்கோ, காரை ஒட்டிச் சென்றவருக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அந்த காரை ஒட்டிச் சென்ற நபரை பிரீத்திங் பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

இதனையடுத்து அந்த டிரைவர் மது அருந்தி வாகனத்தை ஓட்டிச் சென்றாரா? என்பது குறித்து அறிய நடத்தப்பட்ட பிரீத்திங் பரிசோதனையில் முடிவு நெகட்டிவ் என வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் இந்த சம்பவம் குறித்து  விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

விசாரணை

இதுகுறித்து பேசிய விமான நிலைய அதிகாரிகள்,"இன்று காலை இரண்டாவது டெர்மினலில் நின்றுகொண்டிருந்த விமானத்தின் முன் பக்கத்தில் கார் ஒன்று வேகமாக சென்றது. இருப்பினும் இதனால் விமானத்துக்கோ, பணியாளர்களுக்கோ காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த இந்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் விசாரணை நடைபெறும்" என்றனர்.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பீஹார் மாநிலம் பாட்னாவுக்கு செல்ல இருந்த விமானத்தின் கீழ் பகுதியில் தான் கார் சென்றிருக்கிறது. இதனால் விமான நிலையமே பரபரப்படைந்தது. இந்நிலையில், திட்டமிட்டபடி அந்த விமானம் பாட்னா சென்றடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனிடையே விமானத்துக்கு கீழே கார் சென்ற வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Also Read | "நாட்டுக்கு பெருமை சேர்க்குறவங்க இவங்கதான்".. கபாடி வீரர்களுக்கு புதிய திட்டம்.. விளையாட்டுத்துறை அமைச்சர் அளித்த தகவல்..!

FLIGHT, INDIGO PLANE, CAR, CAR UNDER INDIGO PLANE, DELHI AIRPORT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்