மறுபடியும் அதே மாதிரி நடந்த கொடுமை.. ஒன்னு இல்ல ரெண்டு இல்ல 40 கி.மீ தூரம்.. கொதித்த நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மங்களூர் அருகே நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் கார் ஒன்று சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

கர்நாடக மாநிலம் மங்களூரில் அடுத்த பெட்ட லக்கி கிராமத்தில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக ஆம்புலன்ஸ் ஒன்று வேமாக சென்றுகொண்டிருந்தது. முல்கி என்ற பகுதியில் ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற கார் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமலேயே சென்றுள்ளது.

ஆம்புலன்ஸ் டிரைவர் காரை முந்திச் செல்ல முயன்றபோது இடது புறமாகவும், வலதுபுறமாகவும் சாலையில் குறுக்கிட்டபடியே அந்த கார் சென்றுள்ளது. இதேபோல் சுமார் 40 கிலோமீட்டர் ஆம்புலன்ஸை மறித்தவாறே அந்த கார் சென்றுள்ளது. இதனை அடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் டிரைவர் தனது செல்போனில் இதனை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் காரின் பதிவு எண்ணுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காரை ஓட்டி சென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதேபோல் முன்பு ஒருமுறை கர்நாடக மாநிலம் மங்களூரில் கார் ஒன்று ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர் தொடர்ந்து ஹாரன் அடித்தும் கார் டிரைவர் வழிவிடாமல் சென்றார்.

அப்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மீண்டும் கர்நாடகாவில் இதேபோன்று சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AMBULANCE, CAR, KARNATAKA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்