மீண்டும் ‘ஒத்த’ ஓட்டு சம்பவம்.. குடும்பத்துல 12 ஓட்டு இருந்தும் இப்படி பண்ணிட்டாங்களே.. கதறியழுத வேட்பாளர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குடும்பத்தில் 12 வாக்கு உள்ள நிலையில் வேட்பாளர் ஒருவர் ஒரே ஒரு வாக்கு பெற்று தோல்வி பெற்ற சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.

Advertising
>
Advertising

சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சியில் 9-வது வார்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 913 வாக்குகள் பதிவாகின. அதில் பாஜகவை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தார். அவருடைய குடும்பத்தில் 5 ஓட்டுக்கள் இருந்தும் அவர் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றது அப்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் இதேபோன்ற ஒரு சம்பவம் குஜராத்திலும் நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 8,686 கிராம பஞ்சாயத்துக்கான நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றது. ஒவ்வொரு பஞ்சாயத்துக்கான வாக்கு எண்ணிக்கை முடியவும், அதன் முடிவுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வந்தன.

அப்போது வாபி மாவட்டத்தில் உள்ள சார்வாலா கிராம பஞ்சாயத்தின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சந்தோஷ் என்பவர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது குடும்பத்தில் 12 வாக்குகள் உள்ள நிலையில், ஒரே ஒரு வாக்கு மட்டுமே சந்தோஷ் பெற்றார். இதை நினைத்து வாக்கு எண்ணும் மையத்தில் சந்தோஷ் கதறி அழுதுள்ளார்.

இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் பைரவம் நகராட்சியில் தேர்தல் நடைபெற்றது. அதில் இடப்பள்ளிசிரா எனும் வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 6 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார். இது அப்போது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ELECTIONS, GUJARAT, LOCALBODYELECTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்