'இனிமே இப்படித்தான்..' அப்ளிகேஷன் பார்மில் அதிரடி மாற்றம் செய்த கல்லூரி.. குவியும் பாராட்டுக்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

எம்மதமும் சம்மதமில்லை, என் மதம் மனிதம்தான் என்று நினைக்கும் மாணவர்களுக்காகவும், மற்றும் மாணவர்களுக்கு அந்த எண்ணத்தை வரவழைக்கும் நோக்கிலும், மதத்தை குறிப்பிடுவதற்கு பதிலாக ஹியூமானிட்டி என்கிற ஆப்ஷனை விண்ணப்ப படிவத்தில் வைத்துள்ளது பிரபல கல்லூரி நிறுவனம்.

கொல்கத்தா பல்கலைக் கழகத்துக்குட்பட்ட பெத்துனே கல்லூரி, மதத்தின் மீதாக உடன்பாடில்லாதவர்கள் அல்லது, எவ்வித எல்லைகளுக்கும் கட்டுண்டு, அடையாளங்களை துறந்து இருக்க விரும்புவர்களுக்காகவே ஒரு புதிய ஆப்ஷனை கல்லூரி அட்மிஷன் விண்ணப்பத்தில் இணைந்துள்ளது.

அதன்படி, நாக் அக்ரிடியேஷனுக்குக் கீழ் கல்லூரியாக உருவெடுத்த கொல்கத்தாவின் முதல் மகளிர் கல்லூரியா பெத்துனா கல்லூரி, நிறுவனர் மமதா ராய் கூறும்போது, தங்களுடைய மாணவர்கள் பலரும், கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகவும், மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட மனிதாய சித்தாந்தங்களையே விரும்புவதாக தெரிய வந்ததாகக் குறிப்பிடுகிறார்.

இதனால், அரசு அலுவலக விண்ணப்பங்களைப் போன்று, மாணவர்களை கட்டாயமாக தேசியம், பெயர் குறிப்பிடச்சொல்வதைப் போல, மதத்தை குறிப்பிடச் சொல்லி கேட்கும் முறையை மாற்றியமைக்க, அதர்ஸ் எனும் கேட்டகரியை அறிமுகப்படுத்தி, அதில் ஹியூமானிட்டி என்ற புதிய சொல்லை ஆப்ஷனாக வைத்திருப்பதாக கூறுகிறார்.

இப்போதைக்கு இவ்வாறு வைத்துவிட்டு, பின்னர் அடுத்தடுத்து வரும் நாட்களில் மதம் எனும் கேட்டகரியையும் விண்ணப்பத்தில் இருந்து எடுத்துவிடும் யோசனை இருப்பதாகவும் கூறுகிறார்.

COLLEGESTUDENT, COLLEGESTUDENTS, KOLKATA, RELIGION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்