"இனிமே யாரு என்ன உங்கள மாதிரி பாத்துப்பா?".. முதலாளி மரணத்தில் கண்ணீர் விட்டு கதறிய கன்று.. "பாக்குறவங்க மனசே ஒடஞ்சு போச்சுங்க"..

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அடிக்கடி இணையத்தில் செலவிடும் நபர்கள், அதனை திறந்து உள்ளே சென்று நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் தொடர்பான செய்திகளை கண்டு பொழுது போக்குவார்கள்.

Advertising
>
Advertising

இதில் அதிர்ச்சிமிகுந்த, வினோதமான அல்லது மனதை உருக வைக்கக் கூடிய வகையில் என இப்படி ஏராளமான வகைகளில் நிறைய வீடியோக்கள் வைரல் ஆவதை கூட பார்க்க இயலும்.

இப்படி இணையம் முழுக்க நாம் பார்ப்பதற்கு ஏரளாமான விஷயங்கள் நிரம்பி கிடக்கும் நிலையில், அதில் குறிப்பிட்ட ஒரு விஷயம் நமது மனதில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் நிச்சயம் இருக்கும்.

அந்த வகையில் ஒரு வீடியோ தான், தற்போது இணையத்தில் வெளியாகி, பார்ப்போர் பலரையும் கண் கலங்க வைத்ததுடன் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போகவும் வைத்துள்ளது. மனிதர்களை விட விலங்குகள் அதிக அன்பாக இருப்பதாக பலரும் கருதுவார்கள். அதனை மெய்யாக்கும் ஒரு சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்வதற்காக குடும்பத்தினர், ஊர் மக்கள் உள்ளிட்ட பலர் இடுகாட்டிற்கும் சென்றுள்ளனர். அந்த சமயத்தில், மறைந்த நபர் வளர்த்த கன்றும் இடுகாட்டிற்கு வந்துள்ளது.

வந்ததுடன் மட்டுமில்லாமல், அந்த நபரின் உடல் அருகே சென்று நின்ற படி, கண்ணீர் விடவும் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இறந்த தனது முதலாளியை பார்த்து அந்த கன்று சத்தமாக கத்த ஆரம்பித்த நிலையில், அங்கிருந்தவர்கள் பலரையும் இந்த நிகழ்வு ஒரு நிமிடம் அப்படியே வாயடைக்க செய்தது. மேலும், அங்கிருந்தவர்கள் அந்த கன்றையும் இறுதி சடங்கு செய்ய அனுமதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தினமும் தன்னை பார்த்துக் கொள்ளும் நபர், தன்னை விட்டு பிரிந்து சென்றதால் அதனை கொஞ்சம் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல், கத்தி துடிக்கும் கன்று குட்டியின் வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகி, பார்ப்போர் பலரையும் கூட கண்ணீர் வர வைத்துள்ளது.

CALF, EMOTIONAL, VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்