"பெத்த மகன் மாதிரி பாத்துக்கிட்டாரு".. கேப் ஓட்டுநர் செயலைக் கண்டு மனம் உருகிய வாடிக்கையாளர்.. 'வைரல்' சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய காலகட்டத்தில், நகரப் பகுதிகளில் பெரும்பாலான மக்கள், ஓலா, உபேர், ராபிடோ உள்ளிட்ட கேப் நிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்தி, தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | "ஆத்தாடி, வசூல் ஆனது மட்டும் இத்தன கோடியா?".. அமர்க்களமாக நடந்த "மொய் விருந்து".. களைகட்டிய 'நெடுவாசல்'!!

அந்த வகையில் வாலிபர் ஒருவர், பெங்களூரில் கேப் ஒன்றில் பயணம் மேற்கொண்டது தொடர்பாக பகிர்ந்துள்ள பதிவு ஒன்று தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

ஹர்ஷ் ஷர்மா என்ற நபர் ஒருவர் தன்னுடைய Linkedin சமூக வலைத்தள பக்கத்தில், தான் உபேர் கேபில் பயணம் செய்தது தொடர்பாக அதன் ஓட்டுனர் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த ஓட்டுநரின் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ள ஹர்ஷ், தன்னுடைய கேப்ஷனில், "நீங்கள் புகைப்படத்தில் காணும் இந்த நபர் என்னுடைய உறவினரோ, நண்பரோ எனக்கு தெரிந்த யாரும் கிடையாது. சமீபத்தில் எனது கேப் டிரைவராக இவரை சந்தித்தேன். ரவி என்கிற இந்த ஊபர் ஓட்டுநர், நான் விமான பயணத்தில் சரியாக தூங்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு, நான் தூங்குவதற்கு வசதியாக எனது இருக்கையை சரி செய்து தந்தார். அதே போல, காலை உணவு சாப்பிட்டதாக என்னிடம் கேட்டு, நான் இல்லை என சொன்னதும், பின்னர் சிறந்த உணவகம் வரும்போது அழைக்கிறேன் எனக் கூறி, சுமார் ஒரு மணி நேரம் கழித்து தூங்கிக் கொண்டிருந்த என்னை அந்த ஓட்டுநர் அழைத்தார்.

பிறகு என்னை ஒரு உணவகத்திற்கும் அழைத்துச் சென்றார். அங்கே, அவரே எனக்காக ஒரு டேபிளை ஏற்பாடு செய்து, உணவையும் வாங்கி கொடுத்தார். நான் அவரைப் பார்த்து ஒரு மணி நேரம் தான் இருக்கும். அப்படி இருந்தும் ஒரு மகனை நடத்துவது போல என்னை அவர் பார்த்துக் கொண்டார். சுமார் 50 வயது நிரம்பி இருக்கும் நபர் ஒருவர், என்னுடைய வாழ்நாள் முழுவதற்குமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு சென்றார்.

நான் இங்கே மிகவும் நன்றாக உணர்கிறேன். இந்த வேகமான வாழ்க்கையில் எங்கோ மனித நேயம் இருந்து கொண்டே இருக்கிறது என்பதை நான் ஆச்சரியத்துடன் உணர்ந்து கொண்டேன்" என தெரிவித்துள்ளார். ஹர்ஷ் ஷர்மா பதிவு, இணையத்தில் அதிகம் வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் கேப் ஓட்டுநர் செயலை அறிந்து, வேற லெவலில் நெகிழ்ந்து போய், அவரை பாராட்டியும் வருகின்றனர்.

Also Read | புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்ட மனைவி.. புகைப்படத்தை பகிர்ந்து கணவர் போட்ட பதிவு.. "படிச்ச எல்லாருமே கண் கலங்கிட்டாங்க"

BENGALURU, CAB DRIVER, HEARTWARMING GESTURE, CUSTOMER, கேப் ஓட்டுநர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்