“களத்தில் இறங்கி அடித்த கலெக்டர்!”.. “தலைமுடியைப் பிடித்து இழுத்து மர்ம நபர் செய்த காரியம்”.. பரவும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேசத்தின் ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள பியோவோரா பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேரணி நடத்த கோரிய பாஜகவினருக்கு அம்மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததாக தெரிகிறது.

எனினும், அப்பகுதியில் பேரணியாக செல்ல முற்பட்ட  நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துணை ஆட்சியர் பிரியா வர்மா, பாஜக தொண்டர்களை களையச் சொல்லியுள்ளார். அதன் பிறகு ஆர்ப்பாட்டக்காரர்களுள் ஒருவரை அடித்து, அவரை போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்தார். இதனால் அந்த இடத்தில் கலெக்டருடம் ஆர்ப்பாட்டக் காரர்களும் போலீஸாரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் துணை ஆட்சியர் பிரியா வர்மாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்துள்ளார். இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ]

இது தொடர்பாக 121 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

 

BJP, CAA, PROTEST, POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்