இந்திய IT நிறுவனங்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் CEO.. திகைக்க வைக்கும் தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

HCL Tech நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஜயகுமார் கடந்த வருடம் பெற்ற ஊதியம் குறித்து தான் தற்போது உலகமே பரபரப்புடன் பேசிவருகிறது.

Advertising
>
Advertising

Also Read | கரண்ட் பில்லை பாத்துட்டு ஹாஸ்பிட்டலில் அட்மிட்டான குடும்பத்தினர்.. 1 மாசத்துக்கு இவ்வளவு கோடி கட்டணமா?.. அமைச்சரே கொடுத்த விளக்கம்..!

தமிழகத்தின் கோயம்புத்தூரில் பிறந்தவர் விஜயகுமார். இவர் பிரபல பிஎஸ்ஜி கல்லூரியில் 1986 ஆம் ஆண்டு எலெக்ரிகல் & எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றார். HCL நிறுவனத்தில் 1994 ஆம் ஆண்டு சீனியர் டெக்னிக்கல் எஞ்சியினியராக வேலைக்கு சேர்ந்தார். அதன்பிறகு படிப்படியாக முன்னேறி அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்தார். இவர் தற்போது அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் வசித்துவருகிறார்.

அதிக சம்பளம்

பொதுவாக சமீப காலங்களில் திறமையுள்ள பணியாளர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வை அளித்து வருகின்றன ஐடி நிறுவனங்கள். அதுமட்டும் இல்லாமல் கார், வீடு உள்ளிட்ட கவர்ச்சிகர பரிசுகளையும் வழங்கி திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களை தக்கவைக்க முயற்சி செய்கின்றன ஐடி நிறுவனங்கள். ஊழியர்களுக்கே இப்படியென்றால் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு சொல்லவா வேண்டும்? அப்படி கோடிகளில் சம்பளம் வாங்கும் இந்திய ஐடி நிறுவனங்களின் CEO க்களுக்கு மத்தியில் முன்னிலையில் உள்ளார் விஜய குமார்.

HCL Tech, சமீபத்தில் ஆண்டறிக்கையை வெளியிட்டது. அதில் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) C. விஜய குமாருக்கு கடந்த ஆண்டு ரூ.123.13 கோடி ஊதியம் வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது அதிக சம்பளம் வாங்கும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியாக மாறியுள்ளார் விஜயகுமார். அவருடைய வருமானத்தில் நான்கில் மூன்று பங்கு நீண்ட கால பலன்களில் (long-term benefits) சேர்க்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆண்டு ஊதியம் எவ்வளவு?

விஜயகுமார் ஆண்டு அடிப்படைச் சம்பளமாக 2 மில்லியன் டாலரை பெற்றதாகவும், பிற வழிகளில் அவருக்கு கிடைத்த ஊதியம் 2 மில்லியன் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கு அவர் 0.02 மில்லியனை (perquisites) பெர்க்யூசிட்டுகள் மற்றும் பிற சலுகைகளாகப் பெற்றுள்ளார். அதுமட்டும் அல்லாமல் நீண்ட கால பலனாக அவருக்கு 12.50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக அவர் கடந்த நிதியாண்டில் பெற்ற மொத்த ஊதியம் 16.52 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 123.13 கோடி ரூபாய்) என அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

Also Read | தந்தை இறந்த அதே நாளில்... மருத்துவமனையில் பிறந்த மகன்.. கதறித் துடித்த தாய்.. மனதை ரணமாக்கும் துயரம்

C VIJAYAKUMAR, INDIA HIGHEST PAID IT CHIEF, CEO C VIJAYAKUMAR

மற்ற செய்திகள்