'30 பங்களாக்களை' 'தானம்' செய்த 'தொழிலதிபர்...''கொரோனா' சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள 'அனுமதி...' 'வசதிகளை' ஏற்படுத்தித் தருவதாகவும் 'உறுதி...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மேற்கு வங்க தொழிலதிபர் ஒருவர் கொரோனா சிகிச்சைக்காக தனது 30 பங்களாக்களை அரசு பயன்படுத்தி கொள்ள தானமாக அளித்துள்ளார்.

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பலரும் பல்வேறு விதங்களில் தங்களது உதவிகளை வழங்கி வருகின்றனர். தமிகத்தில் நடிகர் பார்த்திபன் தனது வீட்டை கொரோனா சிகிச்சைக்கு பயன்படத்திக் கொள்ளுமாறு அறிவித்திருந்தார்.

அதுபோல், மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஹர்ஷ்வர்தன் நியோடியா  என்பவர் 'தெற்கு 24 பர்கானா' மாவட்டத்தில் உள்ள தன்னுடைய 30 பங்களாக்களை, மாநில அரசு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களை தனிமைபடுத்தி சிகிச்சை அளிக்க இந்த பங்களாக்களை பயன்படுத்தலாம் என அவர் கூறியுள்ளார். அங்கு தூய்மைப் பணி மற்றும் உணவு வசதியையும் செய்து தருவதாக அவர் அறிவித்துள்ளார். இதை மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது

CORONA, KOLKATTA, BUSINESSMAN, DONATED, 30 BANGALOW, TREATMENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்