"சாமி நம்ம வண்டிக்கு பூஜை போடுங்க".. ஹெலிகாப்டருடன் கோயிலுக்கு வந்து அசர வச்ச தொழிலதிபர்.. ட்ரெண்டாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தான் வாங்கிய புது ஹெலிகாப்டருக்கு பூஜை போட அதனை கோவிலுக்கு ஓட்டிச் சென்றிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

"சாமி நம்ம வண்டிக்கு பூஜை போடுங்க".. ஹெலிகாப்டருடன் கோயிலுக்கு வந்து அசர வச்ச தொழிலதிபர்.. ட்ரெண்டாகும் வீடியோ..!
Advertising
>
Advertising

Also Read | சுமார் 13 வருட உழைப்பில் அவதார் 2 -ஆம் பாகம்.. அதுவும் IMAX 3D-ல்.. படத்துல அப்படி என்ன தொழில்நுட்பம் இருக்கு!! Avatar: The Way of Water

இந்தியாவில் புதிதாக இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களை வாங்கும்போதும் மக்கள் அதனை கோவிலுக்கு ஒட்டிச் சென்று வாகன பூஜைகள் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் தெலுங்கானாவைச் சேர்ந்த தொழிலதிபர் போயின்பள்ளி ஸ்ரீனிவாஸ் ராவ் இந்த பாரம்பரியத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். அவர் புதிதாக வாங்கிய ஹெலிகாப்டருக்கு பூஜை போட அதனை கோவிலுக்கு ஓட்டிச் சென்றிருக்கிறார். இதனால் உள்ளூர் மக்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

Businessman Takes His New Helicopter To Temple For Vahan Puja

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு நிறுவனமான பிரதிமா குழுமத்தின் உரிமையாளர் போயின்பள்ளி ஸ்ரீனிவாஸ் ராவ் ஆவார். ஹைதராபாத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யாதாத்ரியில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவிலுக்கு சிறப்பு பூஜைக்காக தனது ஏர்பஸ் ஏசிஎச்-135 ஹெலிகாப்டரில் ராவ் தனது குடும்பத்தினருடன் சென்றிருக்கிறார்.

பிரபல கோவிலை சேர்ந்த மூன்று குருக்கள் தலைமையில் நடந்த பூஜையில் தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த ஹெலிகாப்டரின் விலை 5.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என சொல்லப்படுகிறது. இது மற்ற ஹெலிகாப்டர்களைக்காட்டிலும் அதிக தூரம் எடையுடன் பயணிக்க கூடியது எனவும் இதன் பராமரிப்பு செலவுகளும் குறைவு என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தான் வாங்கிய ஹெலிகாப்டருக்கு பூஜை போட, கோவிலுக்கு அதனை ஒட்டிச் சென்ற சம்பவம் உள்ளூர் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகா பரவி வருகின்றன.

 

Also Read | "நீ சச்சின் மகன்-ங்குறத மறந்துடு".. அர்ஜுன் டெண்டுல்கரின் கோச் போட்ட அதிரடி கண்டிஷன்.. ஆத்தாடி அவரா இது..?

BUSINESSMAN, HELICOPTER, NEW HELICOPTER, TEMPLE, VAHAN PUJA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்