'இவங்களுக்கா' இந்த நிலைமை...? 'எப்பேரு' பட்ட குடும்பம்...! 'இன்னைக்கு யாரும் இல்லாம பிளாட்பாரம்ல வாழுறாங்க...' - இது தான் வாழ்க்கை இல்ல...??!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வரின் நெருங்கிய உறவினர் ஒருவர் சாலை பிளாட்பாரத்தில் வசித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. இவரின் மனைவியின் சகோதரி அதாவது முதல்வரின் மைத்துனி இரா. பாசு பிளாட்பாரத்தில் வசித்து வருகிறார்.

இரா. பாசு அறிவியல் ஆசிரியையாக சுமார் 34 வருடங்கள் வடக்கு பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பிரியநாத் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்தார். முனைவர் பட்டம் பெற்றுள்ள இரா. பாசு கடந்த 2009-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு கர்டா அருகில் உள்ள லிச்சு பகன் என்ற இடத்தில் வசித்து வந்தார்.

அதன்பிற்கு இரா. பாசு என்ன ஆனார், எங்கே சென்றார் என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை. தற்போது இரா பாசு உடல்நலிந்து, அழுக்கான நீல நிற நைட்டியுடன் டன்லப் பகுதியில், சாலையோரத்தில் வசித்து வருவது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் இரா. பாசுவை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பிரியநாத் பெண்கள் உயர் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ண காளி சந்தா கூறும்போது, 'ஆசிரியை இரா. பாசுவிடம் ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி கேட்டிருந்தோம். ஆனால் அவர் சமர்ப்பிக்கவில்லை. அதன்பின் நாங்களும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

சென்ற ஆசிரியர் தினத்தன்று டன்லப் தொழிலாளர்கள் ஆசிரியை இரா. பாசுவை அழைத்து கவுரவித்தும் குறிப்பிடத்தக்கது. அப்போது பேசிய அவர் 'நான் என் சொந்த முயற்சியில் ஆசிரியை ஆனேன். முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உறவினர் என்பதை பலர் அறிந்திருந்தாலும் எனக்கு எந்த விஐபி அடையாளமும் தேவையில்லை. பல மாணவர்கள் என்னை அடையாளம் வைத்துள்ளனர். சிலர் என்னை அணைக்கும்போது கிடைக்கும் நிம்மதியே போதும்' என கூறியுள்ளார். இதுபோன்ற ஒரு ஆசிரியை சாலையோரம் வசிக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்