'தவறுதலாக பாஜக பட்டனை அழுத்தி ஓட்டு’.. ரோஷத்தில் தனக்குத்தானே தண்டனை கொடுத்த வாக்காளர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாஜகவுக்கு தவறிப்போய் ஓட்டு போட்டதால், தன்னுடைய விரலை தானே வெட்டிக்கொண்ட தலித் ஆதரவு வாக்காளர் ஒருவரின் செயல் உத்தரபிரதேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் புலான்ட்ஷார் நாடாளுமன்றத் தொகுதியில் நிகழ்ந்த 2-ம் கட்ட மக்களவை பொதுத் தேர்தலில், வாக்குப்பதிவின்போது இளைஞர் ஒருவர் பிஎஸ்பிக்கு பதிலாக தவறிப்போய், ஈவிஎம் மெஷினில் இருந்த பிஜேபி பட்டனை அழுத்திவிட்டார்.
ஷிகாபூருக்குட்பட்ட அப்துல்லாபூர் ஹூல்சான் கிராமத்தில் வசிக்கும் 25 வயதேயான பவன்குமார் என்கிற இளைஞர், SP-BSP-RLD தலித் ஆதரவுக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் யோகேஷ் வர்மாவுக்கு வாக்களிக்கும் நோக்கில் வாக்குச் சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால் தவறுதலாக நடப்பு எம்.பியும் பாஜக வேட்பாளருமான போலோ சிங்குக்கு ஓட்டினை தட்டிவிட்டார்.
தவறுதலாக பாஜகவுக்கு ஓட்டுப் போட்டதால், தான் தவறு செய்துவிட்டதாகவும், அதற்காக தான் வருந்துவதாகவும் அதை சரிசெய்யும் வகையில், அதற்கு பிராயிச்சித்தம் தேடும் நோக்கிலும் ஈவிஎம் மெஷினில் பாஜகவின் பட்டனை அழுதிய விரல் எந்த விரலோ அந்த விரலை வெட்டிக்கொண்டுவிட்டார் . இதுபற்றி அவர் பேசிய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '2-ம் நம்பர பிரஸ் பண்ண சொன்னாங்க’.. பாஜகவுக்கு ஓட்டு போட சொன்னார்களா தேர்தல் பணி அதிகாரிகள்?
- மேற்கு வங்கத்தில் வன்முறை.. வாக்குப்பதிவின்போது கலவரம்.. தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு!
- 'திருமாவளவன்' தொகுதியில் 'இரு தரப்பினரிடையே கடும் மோதல்'...அடித்து நொறுக்கப்பட்ட வீடுகள்!
- 'ஆட்சி மாற்றம் இல்ல.. அமைப்பு மாறனும்'.. பணத்த திருப்பித் தருமா தேர்தல் ஆணையம்?’ சீமான் ஆவேசம்!
- 'ராகுல் ஜி, ராகுல் ஜி' சத்தம் எழுப்பிய சிறுமி... குரல் கேட்டு ஓடிவந்த 'ராகுல்காந்தி'!
- 'மாலையில் வாக்கு சாவடி அவங்க பக்கம் போய்டும்'...தேர்தல் ஆணையத்திடம் 'திமுக பரபரப்பு புகார்'!
- ‘நான் என்ன அஜித்தா? எம்ஜியாரா?.. பணம் கொடுக்கவே விடமாட்றீங்களே.. அந்த 2 கட்சிதான் பணம் தர்றாங்க..’
- 'பூத் சிலிப் வழங்குவதில் குளறுபடி'... 'விமர்சிக்க விரும்பவில்லை'... - பொன்.ராதாகிருஷ்ணன்!
- பாஜக எம்.பி மீது ‘ஷூ’வை வீசிய நபர்.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!
- 'இந்த கடமையும் ரொம்ப முக்கியம் பாஸ்'...அனைவரது பாராட்டையும் பெற்ற 'தம்பதிகள்'!