அரசு வேலைக்கும் ஆப்பு வச்சுட்டாங்களா!?.. 85 ஆயிரம் ஊழியர்களை நீக்கப்போவதாக அறிவிப்பு!.. இன்னும் அதிகமாகுமாம்!
முகப்பு > செய்திகள் > இந்தியா"பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் எல்லோருமே தேசத்துரோகிகள். அவர்கள் அனைவரையும் வேலையை விட்டே தூக்க வேண்டும். அந்த நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பது உறுதி" என்று கடுமையாகப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் கர்நாடக மாநில பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனந்த குமார் ஹெக்டா.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில், பாஜக கட்சி நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் நாடாளுமன்ற உறுப்பினர், அனந்தகுமார் ஹெக்டா.
அப்போது அவர் பேசியாவதாவது, "உத்தர கன்னடாவில் மட்டுமல்ல; பெங்களூரு மற்றும் டெல்லி வீடுகளில் கூட எனக்கு எப்போதும் பிஎஸ்என்எல் நெவொர்க் கிடைப்பதில்லை. நாட்டின் களங்கமாக இந்த நிறுவனம் உள்ளது. இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவர உள்ளோம். பாஜக அரசினால் கூட பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள சிக்கலைத் தீர்க்க முடியவில்லை. தேசத் துரோகிகளின் கூடாரமாக பிஎஸ்என்எல் மாறிவிட்டது.
இதைக் கார்வார் நகரில் நடந்த கூட்டத்திலும் தெளிவாக எடுத்துரைத்தேன். அரசாங்கம் உரிய நிதி ஒதுக்கியுள்ளது. மக்களிடம் தேவை இருக்கிறது. அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் இருந்தும் பிஎஸ்என்எல்லில் இருப்பவர்கள் வேலை செய்வதில்லை. அதனால் தான் பிஎஸ்என்எல்லில் பணிபுரியும் 85,000 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கவுள்ளோம். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். பிஎஸ்என்எல் நிறுவனம் தனியார் மயமாக்கப்படுவது உறுதி" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "புதுசா ஆளுங்கள எறக்க போறோம்... ஆனா, அதுக்கு முன்னாடி உள்ளுக்குள்ள இத செய்ய வேண்டியது இருக்கு..." அறிவித்த முன்னணி ஐ.டி 'நிறுவனம்'!!!
- எங்களால முடியல...1 லட்சத்து 39 ஆயிரம் பேரை 'வீட்டுக்கு' அனுப்ப போறோம்... 'ஷாக்' கொடுத்த நிறுவனங்கள்!
- 'அப்பா, அம்மா வேலைக்கு போனதை நோட்டம் போட்ட ஆட்டோ டிரைவர்'... 'தனியாக இருந்த பிளஸ் ஒன் மாணவி'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- 'எங்களால சுத்தமா முடியல!.. தயவு செஞ்சு நீங்களே வேலயவிட்டு போயிடுங்க'!.. 22,000 ஊழியர்களை ஒரே மாதத்தில் வெளியேற்றிய கொடுமை!
- ஐ.டி ஊழியர்களுக்கு அடித்த 'ஜாக்பாட்'!.. Outsourcing அதிகமானதால்... டாப் 4 நிறுவனங்களின் 'அதிரடி' திட்டம்!
- கொத்துக்கொத்தாக 'பணிநீக்கம்'... ஐடி ஊழியர்களுக்கு 'காத்திருக்கும்' அடுத்தடுத்த அதிர்ச்சிகள்... ஜூன் காலாண்டில் மட்டும் 'இத்தனை' ஆயிரம் பேரா?
- 'ட்ரம்ப்பின் அடுத்தடுத்த அதிரடிகளால்'... 'பாதிக்கப்பட்டுள்ள டாப் இந்திய ஐடி நிறுவனங்கள்!'... 'விவரங்கள் உள்ளே'...
- 'வேலை தேடுபவர்களிடையே இப்போது இதற்கே மவுசு'... 'குறிப்பாக ஐடி, சாப்ட்வேர் துறைகளில்'... 'ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்!'...
- "நெலம ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு"... '35,000' ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும்... முன்னணி 'நிறுவனம்'!!!
- கொரோனாவுக்கு மத்தியிலும்... பிரபல ஷோரூமில் 'சேல்ஸ்மேன்' பணிக்கு சேர்ந்த தெருநாய்... என்ன காரணம்?