ஆசையா ஸ்வீட் ஊட்ட போன மாப்பிள்ளை.. மறுகணமே மணப்பெண் செஞ்ச விஷயம்.. கல்யாண மேடை களேபரம் ஆயிடுச்சு!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணம் என்பது ஒருவரது வாழ்க்கையின் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. தனது வாழ்நாளை யாருடன் வாழ போகிறோம் என்பதை தீர்மானிக்கும் ஒன்றாக மட்டும் இல்லாமல், மணமக்கள் இருவரது வாழ்க்கையின் அடுத்த கட்டமாகவும் திருமணம் பார்க்கப்படுகிறது.

Advertising
>
Advertising

Also Read | "கல்யாணத்துக்கு வந்தவங்க பார்வை பூரா பேனர் மேல தான்".. நண்பர்கள் செஞ்ச அட்ராசிட்டி.. "மணமகன் எடத்துல ஒரு வார்த்தையை Use பண்ணாங்க பாருங்க"

அப்படி ஒரு சூழலில், ஒரு திருமணம் நடைபெறும் போது அதனை சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் அடுத்தவர்கள் கவனம் பெறும் அளவுக்கு யோசித்து யோசித்து செய்வார்கள்.

யாருமே செய்யாத வகையில் திருமண போட்டோ ஷூட் ஐடியாக்களை பயன்படுத்துவது, ரேஷன் கார்டு, விமான டிக்கெட், மருந்து அட்டை என திருமண அழைப்பிதழில் கூட புதுமை காட்டுவது என இப்படி திருமணத்தை சுற்றி வைரல் ஆகும் விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். திருமண மேடையில், நண்பர்கள் கொடுக்கும் பரிசு, மணமக்களின் நடனம் உள்ளிட்ட விஷயங்கள் கூட பலரையும் வெகுவாக கவரும்.

அதே வேளையில், திருமண மேடையில் எதிர்பாராத விதமாக நிறைய சம்பவங்கள் கூட அரங்கேறி திருமண நாளில் ஒரு வித சலசலப்பையும் உண்டு பண்ணும். அப்படி ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலரது மத்தியில் பரபரப்பு அடைய வைத்துள்ளது.

இது தொடர்பாக வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்ட பிறகு, மணமகளுக்கு இனிப்பு வழங்குகிறார் மாப்பிள்ளை. ஆனால், மணமகள் அதை ஏற்கவில்லை என தெரிகிறது. இருந்த போதும் தொடர்ந்து மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை ஊட்ட முயல, மறுத்துக் கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்த பெண், மாப்பிள்ளையை கன்னத்தில் அறைவதும் வீடியோ மூலம் தெரிய வருகிறது.

இதனால் கோபம் அடைந்த மாப்பிள்ளை, மணமகளை அறைய மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் அடிக்கவும் செய்கின்றனர். இதனால், அங்கிருப்பவர்கள் மத்தியில் பரபரப்பு உருவாக, உடனடியாக இருவரது சண்டையையும் சமாதானம் செய்ய முயற்சிக்கின்றனர்.

இது தொடர்பான வீடியோக்கள் பெரிய அளவில் வைரலாகி வரும் வேளையில், இந்த சம்பவம் எங்க நடந்தது என்பது குறித்த விவரம், சரிவர தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் இது உண்மையா அல்லது Staging ஆ என்றும் குறிப்பிட்டு நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

Also Read | "அன்பு தான் எல்லாமே".. உணவு டெலிவரி ஊழியருடன் பைக்கில் இருந்த பெண்.. இணையவாசிகளை மனம் உருக வைத்த வீடியோ!!

BRIDE, SLAPS, GROOM, MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்