‘அவரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்’.. பாதியிலேயே கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்.. காரணம் என்ன தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மணப்பெண் திடீரென திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

உத்தரப்பிரதேச மாநிலம் சஃபிபூர் கோட்வாலி பகுதியில் உள்ள பரியார் என்ற கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், கான்பூர் நகர் பகுதியை இளைஞருக்கும் கடந்த 20-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அந்த ஊர் வழக்கப்படி, மாலையில் மாப்பிள்ளை ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

ஊர்வலம் முடிந்ததும், சோர்வாக இருந்த மாப்பிள்ளை திடீரென மேடையில் மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மணமகனின் முகத்தில் தண்ணீரை தெளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மணமகனின் தலையில் இருந்த தலைப்பாகையுடன் சேர்த்து விக்கும் (Wig) கழன்று விழுந்துள்ளது.

அப்போது தான் மாப்பிள்ளைக்கு தலையில் முடி இல்லை என்பது மணமகளுக்கும், அவரது உறவினர்களுக்கும் தெரிய வந்துள்ளது. இதனால் மனமுடைந்த மணமகள், அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனை அடுத்து இரு வீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இது கடைசியில் வாக்குவாதத்தில் முடிந்துள்ளது.

மணமகனுக்கு வழுக்கை இருப்பதை மணமகன் வீட்டார் தங்களை ஏமாற்றி விட்டதாக மணமகள் வீட்டார் குற்றம் சாட்டியுள்ளனர். அதனால் திருமண ஏற்பாட்டிற்கான செலவை திரும்ப வேண்டும் என மணமகள் வீட்டார் கேட்டுள்ளார். இதனை அடுத்து இந்த பிரச்சனை காவல் நிலையம் வரை சென்றது. அங்கு இரு வீட்டாரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மணமகனுக்கு வழுக்கை இருப்பதால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MARRIAGE, BALD, WIG, UP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்