4 மணிநேரம் லேட்டா வந்த மாப்பிள்ளை.. உடனே மணப்பெண்ணின் ‘அப்பா’ செஞ்ச காரியம்.. அதிர்ந்துபோன கல்யாண வீடு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமணமகன் திருமணத்துக்கு 4 மணிநேரம் தாமதமாக வந்ததால் பெண் வீட்டார் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | கல்யாணம் முடிஞ்ச 3-வது நாள் புதுமணப்பெண் செஞ்ச காரியம்.. அதிர்ந்துபோன மாமனார்.. போலீஸில் பரபரப்பு புகார்..!
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மல்காப்பூர் பங்கரா கிராமத்தில் கடந்த 22-ம் தேதி திருமணம் ஒன்று நடைபெற இருந்தது. இதற்காக நல்ல நேரம் பார்க்கப்பட்டு, மாலை 4 மணிக்கு திருமணம் நடைபெற இருந்தது. இதனால் அன்றைய தினம் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக செய்யப்பட்டன.
மாலை மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மண்டபத்துக்கு வந்துள்ளனர். ஆனால் மணமகன் வீட்டார் நீண்ட நேரமாக வராமல் இருந்துள்ளனர். இதனை அடுத்து திருமணம் குறிக்கப்பட்ட 4 மணியை கடந்து 5, 6 என சென்றுள்ளது. ஆனாலும் மணமகன் மண்டபத்துக்கு வரவில்லை.
இந்த நிலையில் மணமகன் தனது நண்பர்களுடன் மது குடித்துவிட்டு நடனமாடிக் கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, மதுபோதையில் இருந்த மணமகன் இரவு 8 மணிக்கு மண்டபத்துக்கு வந்துள்ளார். மேலும் குடிபோதையில் இருந்த நண்பர்கள் மண்டபத்தில் அலப்பறை செய்துள்ளனர். இதனால் மணமகள் மற்றும் மணமகன் குடும்பத்தினரிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதை அனைத்தையும் அமைதியாக கவனித்த மணமகளின் தந்தை, மதுபோதையில் இருந்த மணமகனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டார். உடனே திருமணத்திற்கு வந்த உறவுக்காரர் இளைஞரிடம் ஆலோசனை நடத்தி அவருக்கே தனது மகளை மணமுடித்து வைத்துள்ளார்.
இதுகுறித்து கூறிய மணமகளின் தந்தை, ‘ஏப்ரல் 22-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. மணமகன் குடும்பத்தினர் நடனம் ஆடுவதில் பிசியாக இருந்தனர். மாலை 4 மணிக்கு நடக்க இருந்த திருமணத்துக்கு இரவு 8 மணிக்குதான் வந்தனர். அதனால், எனது மகளை என்னுடைய உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டேன்’ எனக் கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கட்டுன மஞ்சள் தாலி ஈரம் கூட காயல.. அன்னைக்கே மணமகள் எடுத்த முடிவு.. "எல்லா ரூமையும் லாக் பண்ணிட்டு.." நள்ளிரவில் நடந்த சம்பவம்
- ‘பாவம்ங்க மாப்பிள்ளை’.. தாலி கட்டுற நேரத்துல கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்.. போலீஸ் விசாரணையில் சொன்ன பரபரப்பு பதில்..!
- மாலை சூட்டிய மணமகன்.. மணமேடையில் பளார்'ன்னு கேட்ட சத்தம்.. கல்யாணத்தில் பரபரப்பு
- “இப்போ இந்த பொருளுக்கு தான் டிமாண்ட் ஜாஸ்தி”.. மணமகனுக்கு மறக்க முடியாத கிஃப்ட் கொடுத்த நண்பர்கள்..!
- கல்யாணத்துல போட்ட 'ஓ சொல்றியா மாமா' பாடல்.. சமந்தாவுக்கே Tough கொடுத்த கல்யாணப் பெண்ணோட அப்பா.. வேற லெவல் சார் நீங்க..வைரல் வீடியோ..!
- வீட்டுல மாமரக்கன்று நட்டதால் கோபம்.. பெத்த அப்பா அம்மான்னு கூட பாக்காம மகன் செஞ்ச பகீர் காரியம்..!
- ஆற்றின் கரை அருகே 'Wedding' போட்டோஷூட்??.. எதிர்பாராத நேரத்தில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்
- கல்யாண மாப்பிள்ளைக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த நண்பர்கள்.. ஓப்பன் பண்ணிய உடன் வெடித்துச் சிரித்த மணப்பெண்.. வைரலாகும் வீடியோ..!
- "இந்தா மச்சான் சீர்".. வித்தியாசமான சீர்வரிசை தட்டை தூக்கிவந்த நண்பர்கள்.. நெகிழ்ந்துபோன மாப்பிள்ளை..!
- தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த பெண்.. மருத்துவமனையில் மாப்பிள்ளை வீட்டாருக்கு காத்திருந்த 'ட்விஸ்ட்'