சொதப்பிய மேக்கப்.. கடுப்பான கல்யாண பெண் செஞ்ச காரியம்.. பரபரப்பான கல்யாண வீடு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணத்தன்று மேக்கப்பை சொதப்பியதாக அழகுக்கலை நிபுணர் மீது பெண்வீட்டார் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | மாண்டஸ் புயல்: இந்த நேரத்துல மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்படாது.. போக்குவரத்து கழகம் தகவல்..!

கல்யாணம் என்பதே பல்வேறு சடங்குகளை உள்ளடக்கியது. வரன் பார்ப்பது துவங்கி, அடுத்தடுத்து ஏகப்பட்ட வேலைகள் அணிவகுத்து நிற்கும். சமீப ஆண்டுகளில் திருமணத்தை ஒட்டி பல்வேறு புதிய புதிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது மேக்கப். விதவிதமான பேக்கஜ்களில் தற்போது மேக்கப் போடப்பட்டு வருகின்றன. தங்களது சருமத்திற்கும் பட்ஜெட்டிற்கும் உகந்த வகையில் மணப்பெண்கள் தங்களுக்கான மேக்கப்பை தேர்வு செய்துகொள்கின்றனர்.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் சரியாக மேக்கப் போடவில்லை என அழகுக்கலை நிபுணர் மீது மணப்பெண் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் பகுதியில் உள்ள காமப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த 3 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்திருக்கிறது.

இதனால் கோட்வாலி பஸார் பகுதியில் பியூட்டி பார்லர் வைத்திருக்கும் அழகுக்கலை நிபுணரை கல்யாண மேக்கப்பிற்காக பெண் வீட்டார் முன்பதிவு செய்திருக்கின்றனர். இதற்காக அட்வான்ஸ் தொகையும் அந்த நிபுணரிடத்தில் பெண் வீட்டார் கொடுத்திருக்கின்றனர். இந்நிலையில், திருமணத்தன்று அந்த நிபுணர் குறித்த நேரத்தில் வராததால் கல்யாண பெண்ணின் குடும்பத்தினர் குழப்பமடைந்திருக்கின்றனர்.

அப்போது மணப்பெண்ணின் தாயார் அந்த அழகுக்கலை நிபுணருக்கு போன் செய்திருக்கிறார். அப்போது, தன்னுடைய பியூட்டி பார்லருக்கு வரும்படி அந்த அழகுக்கலை நிபுணர் தெரிவித்ததாக தெரிகிறது. இதனையடுத்து மணப்பெண் அங்கே சென்று உள்ளார். ஆனால், அங்கேயும் அவருடைய உதவியாளர் மணப்பெண்ணுக்கு மேக்கப் செய்ததாக தெரிகிறது. மேலும், மேக்கப் சரிவர போடாததால் பெண் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது, பியூட்டி பார்லர் உரிமையாளர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனையடுத்து இதுகுறித்து மணப்பெண்ணின் தாயார் ஜபல்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அழகுக்கலை நிபுணர் தங்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் மிரட்டியதாகவும் தங்களது புகாரில் கல்யாண பெண்ணின் தாயார் குறிப்பிட்டிருக்கிறார். இதனையடுத்து, அந்த நிபுணர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 294 மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | "எங்க ஸ்கூல்ல இடவசதியே இல்ல".. 3ம் வகுப்பு மாணவியின் உருக்கமான கடிதம்.. மேடையிலேயே முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட நெகிழ்ச்சி அறிவிப்பு

MADHYA PRADESH, BRIDE, BEAUTICIAN, MAKE UP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்