கல்யாணம் முடிச்சு ரயில் ஏறிய புதுமண தம்பதி.. பாதியிலேயே மணமகள் போட்ட பக்கா பிளான்.. கலங்கிப்போன மாப்பிள்ளை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருமணமான சிறிது நாட்களில் நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிய சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இந்நிலையில் அந்த பெண்மணியை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | காதலர் தினத்தை கொண்டாட கோவா சென்ற காதலர்கள்.. சோகத்தில் முடிந்த காதல் பயணம்.. கலங்கிப்போன குடும்பத்தினர்..!

ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் பகுதியை சேர்ந்தவர் அங்கித். இவருக்கும் உத்திர பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் பகுதியை சேர்ந்த குடியா எனும் இளம்பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி திருமணம் நடைபெற்றிருக்கிறது. உத்திர பிரதேசத்தின் சந்தவுலி மாவட்டத்தில் இவர்களது திருமணம் நடந்து முடிந்த நிலையில் புதுமண தம்பதியரை தனது வீட்டுக்கு விருந்திற்கு அழைத்திருக்கிறார் மணப்பெண் குடியாவின் தோழி நஜினா.

வாரணாசியில் இருந்த நஜினாவின் வீட்டுக்கு புதுமண தம்பதி மற்றும் அங்கித்தின் உறவினர்கள் சென்றிருக்கின்றனர். விருந்து முடித்தவுடன் அஜ்மீருக்கு கிளம்பியிருக்கின்றனர் புதுமண தம்பதியர். வாரணாசியில் இருந்து ரயில் மூலமாக செல்ல அங்கித் திட்டமிட்டிருக்கிறார். அப்போது நஜினா மற்றும் சோட்டூ கட்கானா எனும் மணப்பெண்ணின் உறவினர்களும் ராஜஸ்தானை சுற்றிப்பார்க்க வருவதாக கூறி உடன் சென்றிருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

அப்போது சோட்டூ தான் கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்களை அங்கித் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அளித்திருக்கிறார். அதனை தொடர்ந்து, தேநீரையும் அவர் வாங்கி விநியோகம் செய்திருக்கிறார். இதனை அருந்திய அங்கித்தின் உறவினர்கள் மயக்கமடைந்திருக்கின்றனர். அதன் பின்னர் கான்பூர் மத்திய ரயில்வே நிலையத்தில் குடியா, நஜினா மற்றும் சோட்டூ ஆகியோர் இறங்கியுள்ளனர்.

மயக்கம் தெளிந்து எழுந்த அங்கித்தின் உறவினர்கள் தாங்கள் அணிந்திருந்த நகை மற்றும் வைத்திருந்த பணம் ஆகியவை களவுபோயிருப்பதை அறிந்து திடுக்கிட்டனர். அப்போது தான் குடியா மற்றும் அவரது உறவினர்கள் ரயிலில் இல்லாததும் தெரிய வந்திருக்கிறது. உடனடியாக இதுகுறித்து ரயில்வே காவல்துறையில் அங்கித்தின் உறவினர்கள் புகார் அளித்திருக்கின்றனர். இதனையடுத்து களத்தில் இறங்கிய போலீசார், பிரயாக்ராஜ்-லிருந்து பேருந்தில் வாரணாசி செல்ல முயன்ற மூவரையும் கைது செய்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

அவர்களிடத்தில் நடத்திய விசாரணையில் குடியா ஏற்கனவே திருமணமானவர் என்பதும், நகை பணத்தை திருட உணவுப் பொருளில் மூவரும் மயக்கமருந்து கலந்து கொடுத்ததும் தெரிய வந்திருக்கிறது. திருமணமான சில நாட்களில் நகை மற்றும் பணத்துடன் மணப்பெண் தப்பியோட முயற்சித்து கைதான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ஒரு வாரமா வீட்டுக்குள்ள இருந்து துர்நாற்றம்.. லிவிங் டுகெதரில் இருந்த வாலிபர் செஞ்ச பயங்கரம்.. விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்கள்..!

UTTARPRADESH, BRIDE, GROOM, BRIDE ESCAPE, ARREST, MONEY, JEWELS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்