"கார் கொடுத்தா கல்யாணம்".. டிமாண்ட் வைத்த மாப்பிள்ளை.. சிங்கப்பெண்ணாய் மாறிய மணமகள்.. எல்லோரும் ஷாக் ஆகிட்டாங்க..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇமாச்சலப் பிரதேசத்தில் வரதட்சணை கொடுக்காவிட்டால் திருமணம் நடக்காது என மணமகன் கூறிய நிலையில் மணப்பெண்ணே அந்த திருமணத்தை நிறுத்தி, காவல்துறையிலும் புகார் அளித்திருக்கிறார். இது அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என சட்டம் இயற்றப்பட்டு இருந்தாலும் கள எதார்த்தம் அப்படி இல்லை. இன்னும் பல இடங்களில் வரதட்சணை காரணமாக பெண்கள் பாதிப்புகளை சந்தித்து தான் வருகின்றனர். இதனை தடுக்க, பல்வேறு விதங்களில் அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில் வரதட்சணையால் ஒரு திருமணமே நின்று போயிருக்கிறது.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் உனா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் ஹமீர்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து இரு தரப்பிலும் கல்யாண வேலைகள் தடபுடலாக நடைபெற்று வந்திருக்கின்றன. வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த மணமகன் திருமணத்திற்காக வீடு திரும்பியதும் திருமண சடங்குகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி மணமகள் வீட்டிற்கு சென்று திருமணத்திற்கு முந்தைய சடங்குகளில் அவர் ஈடுபட்டதாக தெரிகிறது.
Images are subject to © copyright to their respective owners.
அதன் பின்னர் மணமகன் வீட்டிற்கு மணப்பெண்ணின் குடும்பத்தினர் சென்று சடங்குகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில் திருமண நாள் அன்று மணப்பெண் விட்டார் தயாராக இருந்த சூழ்நிலையில் மணமகன் குடும்பத்தினர் ஊர்வலமாக திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்திருக்கின்றனர். அப்போது நகை, ரொக்கம் மற்றும் கார் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட வேண்டும் என மணமகன் கேட்டதாக தெரிகிறது. இதற்கு முன்னர் அது பற்றி ஏதும் பேசாததால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் வீட்டார் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.
அப்போது மணப்பெண் துணிச்சலாக சென்று இந்த திருமணத்தை முறித்துக் கொள்வதாகவும் "நீங்கள் வீட்டிற்கு செல்லலாம்" எனவும் மணமகன் வீட்டினரிடம் தெரிவித்திருக்கிறார். அதன்படி மாப்பிள்ளை வீட்டார் அங்கிருந்து அதிர்ச்சியுடன் கலைந்து சென்று இருக்கின்றனர். அதனுடன் தனது திருமணத்திற்கு வந்த அனைவரும் பசியுடன் செல்லக்கூடாது என கூறிய அந்த மணப்பெண் அனைவரும் சாப்பிட்டு செல்லும்படி தனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இதனை அடுத்து தனது சகோதரருடன் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார் அந்த மணப்பெண். இது தொடர்பாக மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பங்கனா காவல் நிலையத்தில் வரதட்சணை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல் நிலைய பொறுப்பாளர் பாபு ராம் தெரிவித்திருக்கிறார். இது அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- குறையொன்றுமில்லை.. மனமகிழ்ச்சியுடன் மணமுடித்த மாற்றுத் திறனாளி தம்பதிகள்.. நெகிழ்ச்சி வீடியோ..!
- 102 மொய் கவுண்டர்கள்.. திரண்டு வந்த 50,000 பேர்.. மதுரை மண்ணில் நடந்த பிரம்மாண்ட சமுதாய திருமணம்.. வீடியோ..!
- சுப நிகழ்ச்சியில் நடந்த துயரம்.. பதறிப்போன உறவினர்கள்.. நெஞ்சை ரணமாக்கிய வீடியோ..!
- "பழைய பீரோவை வரதட்சணையா கொடுக்குறாங்க".. தாலி கட்ட மறுத்த மாப்பிள்ளை.. மணப்பெண் அதிரடி முடிவு..!
- கல்யாணம் முடிச்சு ரயில் ஏறிய புதுமண தம்பதி.. பாதியிலேயே மணமகள் போட்ட பக்கா பிளான்.. கலங்கிப்போன மாப்பிள்ளை..!
- கல்யாணமாகி 4 நாள் தான் ஆச்சு.. விருந்துக்கு போன புதுமண தம்பதிக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்..!
- கையில் பேனரோட திருமண ஜோடியை வழிமறிச்ச 7 பெண்கள்.. "மாப்பிள்ளை முகம் எல்லாம் வேர்த்து போச்சு"!!
- சிம்பிளா திருமணம்.. கல்யாணத்துக்கு வச்சிருந்த பணத்தை ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக கொடுத்த குடிமைப்பணி தம்பதி..!
- கல்யாணம் நெருங்கிய நேரத்துல நடந்த அசம்பாவிதம்.. "விடுறா வண்டிய ஹாஸ்பிடலுக்கு".. மாலையும், தாலியுமா கிளம்பிய மாப்பிள்ளை..
- மேடையில் தள்ளாடிய மாப்பிள்ளை.. மணப்பெண் எடுத்த முடிவு.. சோகத்தில் முடிந்த கல்யாணம்..!