‘என் 9 மாசம் உழைப்பு’!.. கல்யாணம் முடிஞ்ச கையோடு ‘புதுமணப்பெண்’ எடுத்த முடிவு.. காத்திருந்து கூப்பிட்டுப்போன மாப்பிள்ளை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருமணம் முடிந்த கையோடு புதுமணப்பெண் வங்கி போட்டி தேர்வு எழுதிய சம்பவம் பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா அசோக்புரா கிராமத்தை சேர்ந்தவர் சுவாதி. கல்லூரி படிப்பை முடித்த இவர், மத்திய கூட்டுறவு வங்கிக்கான போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில் இவருக்கும், சுண்டிகொப்பா அருகே மதிகாமா கிராமத்தை சேர்ந்த சுரேசுக்கும் பெற்றோர்கள் திருமணம் பேசி முடித்துள்ளனர்.
அதன்படி நேற்று சுவாதிக்கு திருமணம் நடந்தது. ஆனால் திருமணத்தன்றுதான் சுவாதிக்கு போட்டித்தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது கணவர் அவரது குடும்பத்தினரிடம் சுவாதி தெரிவித்தார். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனை அடுத்து திட்டமிட்டபடி நேற்று காலை 6 மணி முதல் காலை 9 மணிக்குள் சுரேஷ் சுவாதிக்கு திருமணம் நடந்தது.
இந்த திருமணம் மடிகேரி டவுனில் உள்ள அம்பேத்கர் பவனில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சற்று வேகமாக நடந்தது. திருமணம் முடிந்தகையோடு மணமகள் சுவாதி, திருமண கோலத்திலேயே போட்டித்தேர்வு எழுதுவதற்காக மடிகேரியில் உள்ள ஜூனியர் கல்லூரிக்கு வந்தார். அப்போது தேர்வு அறையில் இருந்த சக தேர்வாளர்கள் அவரை ஆச்சரியமாக பார்த்தனர்.
இதுகுறித்து தெரிவித்த சுவாதி, ‘நான் கடந்த 9 மாதங்களாக போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்தேன். இந்த நிலையில்தான் எனக்கும், சுரேசுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்தால் 9 மாதங்களாக நான் பட்ட கஷ்டத்திற்கு பலன் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக, போட்டி தேர்வு எழுதுவது பற்றி கணவர், மாமியாரிடம் கூறினேன். அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். எனது பெற்றோர் மற்றும் கணவர், குடும்பத்தினர் உதவியுடன் போட்டித் தேர்வை எழுதியுள்ளேன். இந்த தேர்வுக்காக திருமண நிகழ்ச்சிகளை நாங்கள் எளிமையாக, விரைவாக நடத்தி முடித்தோம். போட்டித் தேர்வை சிறப்பாக எழுதியுள்ளேன். வெற்றிபெறுவேன் என்று நம்பிக்கை உள்ளது’ என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சுவாதி தேர்வு எழுதும் வரை கணவர் சுரேஷ் வெளியே காத்திருந்து அவரது அழைத்துச் சென்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நம்பினா நம்புங்க!'.. இதுவும் Pre-wedding Shoot தான்! பரவும் போட்டோஸ்.. ‘பட்டையை கிளப்பிய தம்பதி!’
- ‘கல்லூரி மாணவர்களின்’... ‘அரியர் தேர்வு விவகாரத்தில்’... ‘உயர்நீதிமன்றத்தில்’... ‘யுஜிசி திட்டவட்டம்’...!!!
- ‘லவ் பண்ணிருக்கோம்ல...’ எப்படி விட முடியும்...? ‘ஒரே காதல் குழப்பம்...’ ‘அடுத்தடுத்து மாறிய முடிவுகள்...’ – கடைசில் திடீர் திருப்பம்...!
- 'இனிமேல் மதம் மாத்துறதுக்காக...' 'திருமணம் செய்தால் 5 வருஷம் ஜெயில்...' - சட்டம் கொண்டு வரப்போவதாக அறிவித்த மாநிலம்...!
- 'இப்படியே இருந்தா எப்படி? எப்பதான் கல்யாணம் பண்ண போறிங்க?' .. ‘மனம் திறந்த’ நியூஸிலாந்து பிரதமர்.. காதலர் யார் தெரியுமா?
- 'ஒழுங்கா என்கூட வாழு...' 'அப்படியொரு கல்யாணமே நடக்கல...' 'அப்போ எப்படி மேரேஜ் சர்டிபிக்கேட்...? - அதிர்ச்சியில் உறைந்த இளம்பெண்...!
- 'காதலிச்சிட்டு எப்படி விட முடியும்'...'சொல்லி பாத்தோம், எங்க வீட்டுல ஒத்துக்கல'... காதலர்கள் எடுத்த அதிரடி முடிவு!
- 'கல்யாணத்திற்கு முன் ஷாக் கொடுத்த காதலி'... 'ஆனாலும் இதுதான் என் வாழ்க்கையோட மகிழ்ச்சியான நாள்!!!'... 'கடைசியில் காத்திருந்த ஹேப்பி டிவிஸ்ட்!'...
- மண்டபம் ஃபுல்லா ‘சீர்வரிசை’.. என்னது இவ்ளோ ரூபாயா..! மிரண்டுபோன சொந்தக்காரர்கள்.. மதுரையை திரும்பி பார்க்க வைத்த கல்யாணம்..!
- 'திருமணமான பெண்ணை தூக்க ஃபிளைட் புடிச்சு போன ஆட்டோக்காரர்'... ஊருக்குள் போனதும் காத்திருந்த ட்விஸ்ட்!