மாப்பிள்ளையை காணோம்.. பரபரப்பான மண்டபம்.. அப்புறம் தான் விஷயமே தெரிஞ்சிருக்கு.. கல்யாணத்தையே நிறுத்திய மணப்பெண்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீஹார் மாநிலத்தில் மது போதையில் கல்யாணத்தையே மறந்து தூங்கிய மணமகன் மீது காவல்துறையில் பெண்வீட்டினர் புகார் அளித்திருக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | தாயார் மறைவு.. ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன முதல்வர் முக.ஸ்டாலின்..!

திருமணம்

பீகார் மாநிலத்தின் பாகல்பூர் அருகே உள்ளது சுல்தாங்கஞ்ச். இப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. இருவீட்டினர் சார்பிலும் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அதற்கான வேலைகள் தடபுடலாக நடைபெற்று வந்திருக்கின்றன. இந்நிலையில் திருமண தேதியும் வந்திருக்கிறது.

தூங்கிய மாப்பிள்ளை 

திருமண நாளன்று செய்ய வேண்டிய பூஜைகள் மற்றும் சடங்குகள் துவங்கி நடைபெற்றிருக்கின்றன. ஆனால், மணமேடைக்கு மாப்பிள்ளை வராததால் அங்கிருந்த அனைவரும் சந்தேகம் அடைந்திருக்கின்றனர். 

Images are subject to © copyright to their respective owners.

இதனை தொடர்ந்து, மாப்பிள்ளையை அழைத்துவரும்படி அங்கிருந்த உறவினர்களிடம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும், அவர் வராததால் மணமகளின் உறவினர்கள் சென்று அவரை மண்டபத்தில் தேடியுள்ளனர்.

அப்போது, ஓர் அறையில் மாப்பிள்ளை தூங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். பின்னர் அவரை எழுப்பிய நிலையில் அவர் மது மயக்கத்தில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து விசாரிக்கையில் திருமணத்திற்கு முந்தைய தினம், மணமகன் மது அருந்தியதும் அதனாலேயே தனது திருமணத்தை மறந்து அவர் தூங்கியதும் தெரிய வந்திருக்கிறது.

Images are subject to © copyright to their respective owners.

புகார்

இதனையடுத்து திருமணத்தை நிறுத்துவதாக மணப்பெண் சொல்லவே, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். அப்போது பொறுப்பில்லாத நபரை திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து மணப்பெண் வீட்டினர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். அப்போது, திருமணத்திற்காக ஆன செலவுகளை கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read | அது டீம் இல்ல.. குடும்பம்... CSK அணியில் விளையாடிய நாட்கள்.. ஹர்பஜன் சிங் உருக்கம்..!

BIHAR, BRIDE, MARRIAGE, GROOM DRUNK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்